வந்தாச்சு புதிய விதி.. தப்பிக்க போகும் பேட்ஸ்மேன்.. ஐசிசி அதிரடி முடிவு.. இனி யாரையும் ஏமாற்ற முடியாது!

0
14317

சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆண்டிலும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும். கடந்த ஐபிஎல் தொடரின் போது இம்பேக்ட் பிளேயர் விதிமுறை முதல்முறையாக கொண்டு வரப்பட்டது. எப்படி கால்பந்து சம்ஸ்ட்டியூட் வீரர் உள்ளே கொண்டு வரப்படுவாரோ, அதேபோல் ஒவ்வொரு அணியும் ஒரேயொரு வீரரை மாற்றி கொள்ள முடியும்.

அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன் ஸ்டம்புகள் லைட் எறியும் வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. அதேபோல் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது டிஆர்எஸ் என்ற புதிய விதிகள் கொண்டு வரப்பட்டது. நடுவரின் தீர்ப்பை எதிர்த்து வீரர்கள் 3வது நடுவரிடம் அப்பீல் செய்யும் முறை தான் டிஆர்எஸ் ஆகும்.

- Advertisement -

இதன்படி எல்பிடபிள்யூ, கீப்பர் கேட்ச் உள்ளிட்டவை குறித்து வீரர்கள் மேல்முறையீடு செய்வார்கள். ஒருவேளை தீர்ப்பு நடுவருக்கு எதிராக வந்தால், கள நடுவர் மன்னிப்பு கேட்டு அவுட் கொடுப்பார். ஆனால் இதில் ஒரு குழப்பம் நீடித்து வந்தது. அதாவது விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்ததற்கு லெக் சைட் நடுவரிடம் அப்பீல் கோரி, அது 3வது நடுவருக்கு சென்றால், அதனை 3வது நடுவர் கீப்பர் கேட்சையும் சோதனை செய்வார்.

அதன்பின்னர் ஸ்டம்பிங் சோதனை செய்வார். இது பவுலிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருந்து வந்தது. அண்மையில் கூட ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பிங் செய்து நடுவரிடம் அவுட் என்று அப்பீல் செய்ய, அது 3வது நடுவரின் தீர்ப்புக்கு சென்றது. அப்போது பவுலிங் அணி டிஆர்எஸ் விதிமுறை கேட்காமலேயே கீப்பர் கேட்ச் சோதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐசிசி தரப்பில் இந்த விதிமுறை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் லெக் சைட் நடுவர் ஸ்டம்பிங் தீர்ப்புக்காக 3வது நடுவரிடம் முடிவை கொண்டு சென்றால், அங்கு லெக் அல்லது ஆஃப் திசையில் உள்ள கேமராக்களின் மூலமாக மட்டுமே சோதனை செய்யப்படும் என்றும், கீப்பர் கேட்ச் பிடிக்கப்பட்டதற்கான ஸ்னிக்கோமீட்டர் சோதனை செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோல் ஒரு பவுலர் பந்துவீசி கொண்டிருந்த போது கன்கஷன் விதியின் மூலம் வெளியேறினால், அவருக்கு பதிலாக வரும் வீரர் பவுலிங் செய்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் களத்தில் எந்த வீரராவது காயமடைந்தாலும் அவருக்கு சிகிச்சை அளிக்க 4 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பரிசோதனை முயற்சியில் ஸ்டாப் டைமர் முறை நடைமுறையில் உள்ள நிலையில், ஆட்டங்களை சரியான நேரத்தில் முடிக்க ஐசிசி பல்வேறு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.