கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரின் வாழ்க்கை பாவமானது.. இதை நீங்களே பாருங்களேன் – இயான் பிஷப் வருத்தம்

0
8
Shreyas

நடப்பு ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட, சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகிக் கொள்ள, தற்போது ஐபிஎல் தொடரில் அதிக அனுபவம் உள்ள கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டனாக அவருக்கு என்ன மாதிரியான அங்கீகாரம் கிடைக்கிறது என்பது குறித்து இயான் பிஷப் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து அந்த அணியை இறுதி போட்டிக்கு கூட்டிச் சென்றவராக இருந்தார். மேலும் அவர் காயம் அடைந்து ஒரு சீசன் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட முடியாமல் போனது.

- Advertisement -

இந்த நேரத்தில் டெல்லி அணி ரிஷப் பண்ட்டை கேப்டனாக ஆகியது. மேலும் ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் மிகச் சிறப்பாக விளையாட ஆரம்பித்தார். இதன் காரணமாக அவரது புகழை பயன்படுத்திக் கொள்ள அவரையே கேப்டனாக டெல்லி அணி அறிவித்தது. இதன் காரணமாக டெல்லி அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகிக் கொண்டார்.

இதற்குப் பிறகு கொல்கத்தா அணிக்கு கேப்டனாக 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் மூலம் வந்தவர், கடந்த ஆண்டு காயத்தின் காரணமாக விளையாட முடியாமல் போனது. இந்த ஆண்டு அணியை சிறப்பாக வழிநடத்தி பத்து போட்டிகளில் 7 போட்டிகளை வென்றிருக்கிறார். ஏறக்குறைய கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் விளிம்பில் நிற்கிறது.

இந்த நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து இயான் பிஷப் வெளியிட்டுள்ள பதிவில் “கொல்கத்தா அணி தோல்வி அடையும் பொழுது, அந்த தோல்விக்கான பொறுப்பு ஸ்ரேயாஸ் ஐயர் பக்கம் சென்று விடுகிறது. அதே சமயத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெறும் பொழுது, அதற்கான பாராட்டு புகழ் வேறு பக்கம் போய் விடுகிறது” என்று வருத்தத்துடன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க நிச்சயம் பிளே ஆஃப்க்கு வருவோம்.. இந்த 2 விஷயத்தை மட்டும் பார்க்க விரும்பறேன் – ஆர்சிபி ஆன்டி பிளவர் பேச்சு

தற்போது கொல்கத்தா அணியின் மென்டராக வந்திருக்கும் கம்பீர்தான் அந்த அணியின் வெற்றிகளுக்கு காரணம் என்று பொதுவாக கூறப்பட்டு வருகிறது. அவர் மீண்டும் சுனில் நரைனை துவக்க ஆட்டக்காரராக கொண்டு வந்திருக்கிறார். எனவே எல்லாப் புகழும் அவர் பக்கமாக போய்விடுகிறது. களத்தில் கேப்டனாக ஸ்ரேயாஸ் சிறப்பாக செயல்பட்டாலும் கூட அவருக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. இதைத்தான் இயான் பிஷப் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.