சில மூஞ்சிங்களை அடுத்த டி20 உலககோப்பைல பாக்கவே கூடாது – இருவரை நேரடியாக விமர்சித்த சேவாக்!

0
12782

சீனியர்கள் போர்வையில் விளையாடாமல் இருக்கும் வீரர்களை அடுத்த உலகக் கோப்பையில் பார்க்கவே கூடாது என்று நேரடியாக விமர்சித்திருக்கிறார் சேவாக்.

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நல்ல துவக்கம் பெற்றது. ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அரையறுதி போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்து பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

கோப்பையை வெல்லும் அளவிற்கு பலம் பொருந்திய இந்திய அணி இப்படி தொடர்ந்து முக்கியமான நாக்-அவுட் போட்டிகளில் வெளியேறி வருவதால் ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை பாரபட்சம் இன்றி வைத்திருக்கின்றனர்.

ரோஹித் சர்மா, அஸ்வின், முகமது சமி, தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர் வீரர்கள் எதற்காக இந்திய அணியில் இருக்க வேண்டும் ஓய்வு பெறச் சொல்லுங்கள் என்று ட்விட்டர் பக்கத்தில் காரசாரமான கருத்துக்களை பதிவிட்டு வருவதால் விவாதம் இன்னும் சூடு பிடித்திருக்கிறது.

இந்நிலையில் இதற்கு அப்படியே ஒத்துப் போகும் கருத்தை முன் வைத்திருக்கிறார் வீரேந்தர் சேவாக்.

- Advertisement -

“இரண்டு வருடங்களில் அடுத்த டி20 உலக கோப்பை வரவிருக்கிறது. அதற்கு இப்போது யோசித்தால் மட்டுமே நல்ல முடிவுகளை எடுக்க முடியும். இந்த வகையில் சரியாக செயல்படாத சீனியர் வீரர்களை அணியை விட்டு நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். தேர்வு குழுவினர் இதை செய்வார்கள் என்று நம்புகிறேன்.

ஆனால் இங்கு சிக்கல் என்னவென்றால், இதே தேர்வு குழு மீண்டும் ஒரு முறை நீடிக்குமா? என்பதுதான். ஏனெனில் ஒரு தோல்வி அணியின் மத்தியில் மட்டுமல்லாது நிர்வாகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களின் செயல்பாடு இன்னும் அதிகமாக இருக்கும்.

ஆகையால் புதிய தேர்வு குழுவை நியமிக்க வேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து விரைவில் 15 வீரர்களை தயார் செய்ய வேண்டும். அடுத்த உலக கோப்பைக்கு இரண்டு வருடங்கள் இருக்கிறது என்று மெத்தனமாக இருந்து விடக் கூடாது.” என்றார்.