“நான் இவரோட சாதனையை உடைப்பனு கனவுல கூட நினைக்க மாட்டேன்” – ரோஹித் சர்மா சுவாரசியமான பேட்டி!

0
409
Rohit

உலகக்கிரிக்கெட்டில் மிகவும் நளினமான பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் ஒருவர். அவர் பந்துக்கு விளையாடும் நேரம் என்பது அவ்வளவு அழகியலானது!

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவை பற்றி எப்பொழுது கூறினாலும், அவரைப் போல் இந்திய அணியில் பந்தை டைமிங் செய்யக்கூடிய வீரர் வேறு யாருமே கிடையாது, அவருக்கு டைமிங் எக்கச்சக்கமாக இருக்கிறது என்று புகழ்ந்து கூறுவார்!

- Advertisement -

அதே சமயத்தில் உலகக் கிரிக்கெட்டில் எடுத்துக் கொண்டால், பவர் ஹிட்டர்கள் என்று பலர் இருந்திருக்கிறார்கள். மகேந்திர சிங் தோனி, ஆண்ட்ரே ரசல், கீரன் பொல்லார்டு மற்றும் தற்போதைய ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஸ் இவர்களெல்லாம் பந்தை மிக வலிமையாக அடிக்கக் கூடியவர்கள்.

ஆனால் ரோஹித் சர்மா பந்தை மிக வலிமையாக அடிக்கக்கூடியவர் கிடையாது. பந்தை டைமிங் செய்து மட்டுமே விளையாடக்கூடியவர். ஆனால் உலகின் அதி ஆபத்தான அதிரடி பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவராக இருப்பவர். இதன் காரணமாகத்தான் இவருடைய பேட்டிங் மதிப்பு உலக அளவில் மிகப்பெரியதாக இருக்கிறது.

தற்பொழுது சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்தவர்களுக்கான பட்டியலில் கிறிஸ் கெயில் 551 இன்னிங்ஸ்களில் 553 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 467 இன்னிங்ஸ்களில் 539 சிக்ஸர்கள் அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 14 சிக்ஸர்கள் தேவை.

- Advertisement -

தற்பொழுது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் பட்லர் மற்றும் விராட் கோலி இருவரும் 308 மற்றும் 278 சிக்ஸர்கள் உடன் பத்து மற்றும் பதினொன்றாவது இடத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வேறு யாரும் ரோஹித் சர்மா காலத்தில் இந்த சாதனை பட்டியலில் விளையாடவில்லை.

இதுகுறித்து ரோஹித் சர்மா கூறும் பொழுது ” இது மிகவும் ஒரு தனித்துவமான சாதனையாக இருக்கும். நான் வெயிலின் இந்த சாதனையை முறியடிப்பேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது. இது வேடிக்கையானது. நான் பெரிய தசைகள் கொண்ட ஆள் கிடையாது. ஆனாலும் பந்தை கடினமாக அடிக்க விரும்புகிறேன்.

நான் கிரிக்கெட் விளையாடும் பொழுது பந்தை டைம் செய்ய சொன்னார்கள். நாங்கள் விளையாடும் பொழுது காற்றில் பந்தை அடிக்கக் கூடாது என்று சொன்னார்கள். மேலும் நாங்கள் பள்ளியில் விளையாடினோம். எங்களிடம் அப்போது வலைகள் இல்லை. இதனால் நாங்கள் பந்தை தூக்கி அடித்தால் யார் மீதாவது படும். பிறகு நாங்கள் வலைகளில் பந்து தூக்கி அடித்தால் கூட வலையை விட்டு வெளியேற வேண்டும். இப்படித்தான் நாங்கள் பயிற்சி பெற்றோம்!” என்று கூறியிருக்கிறார்!