“இந்த இடத்திற்கு வருவதற்கு நிறைய உழைத்திருகிறேன்.. எளிதாக விட்டுக்கொடுக்காமல் இன்னும் கடினமாக செயல்படுவேன்” – பண்புடன் பேசிய ஜெய்ஸ்வால்!

0
7182

“இந்த இடத்திற்கு வருவதற்கு நிறைய உழைத்திருக்கிறேன். என்னுடைய முழு ஆட்டத்தையும் வெளிப்படுத்தி செயல்பட்டு வருகிறேன்.” என்று போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்துள்ளார் ஜெய்ஸ்வால்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றிருக்கும் இந்திய அணி தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில் விளையாடுகிறது. இப்போது டாமினிகா தீவுகளில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற வருகிறது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியை 150 ரன்கள் சுருட்டி ஆல் அவுட் செய்த பிறகு இந்திய அணி களம் இறங்கியது. ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி முதல் நாள் முடிவில் 80 ரன்கள் சேர்த்து விக்கெட் இழப்பின்றி முடித்திருந்தது.

இரண்டாம் ஆண்டு ஆட்டத்தை துவங்கிய இந்த ஜோடி நூறு ரன்கள் கடந்து விளையாடி வந்தது. இருவருமே அரைசதம் அடித்திருந்தனர். அறிமுக போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் பல்வேறு ரெக்கார்டுகளை படைத்திருந்தார் ஜெய்ஸ்வால்.

தன்னுடைய இந்த அரைசதத்தை சதமாக மாற்றிய ஜெய்ஸ்வால் இதன் மூலமும் சாதனைகள் படைக்க தவறவில்லை. அறிமுகப் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது இந்திய துவக்க வீரர் என்கிற மிகப்பெரிய சாதனையைப் படைத்தார். மேலும் அறிமுக போட்டியில் அதிக பந்துகளை பிடித்த இந்திய வீரர் என்னும் ரெக்கார்டையும் தன் வசப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இரண்டாம் நாள் முடிவில் 350 பந்துகளுக்கு 14 பவுண்டரிகள் உட்பட 143 ரன்களைக் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளார். இரட்டை சதம் அடித்து இன்னும் பல சாதனைகளை முறியடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இவர் மீது இருந்து வருகிறது.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த ஜெய்ஸ்வால், அறிமுகப் போட்டிகள் சதம் அடித்த உணர்வுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

” நான் விளையாடியதிலேயே மிகவும் உணர்வுபூர்வமான ஆட்டம் இது. இந்திய அணிக்குள் வருவதை மிகவும் கடினம். ஆகையால் இந்த தருணத்தில் என்னுடைய ஆதரவாளர்கள் அணி நிர்வாகம் மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு நன்றியை கூறிக் கொள்கிறேன்.

இந்த பிட்ச் பேட்டிங் செய்வதற்கு மிகவும் மந்தமாக, மைதானத்தின் சுற்றுப்புறமும் மிகவும் மந்தமாக இருப்பதால் பௌண்டரி அடிப்பதற்கே கடினமாக இருக்கிறது. பேட்டிங் செய்வதற்கு சவாலாகவும் இருந்து வருகிறது. இங்கு வெப்பமும் அதிகமாகவே இருப்பதால் கடினமான சூழல்கள் இருந்த போதும் என்னுடைய நாட்டிற்காக விளையாடுகிறேன், ஒவ்வொரு பாலையும் ரசித்து பேட்டிங் செய்ய வேண்டும் என்று எண்ணி விளையாடினேன்.

எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். கடினமான சூழல்களை சவால் நிறைந்துள்ள சூழல்களை எதிர்கொள்வதும் பிடிக்கும். மேலும் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் இடங்களில் பேட்டிங் செய்வதை என்ஜாய் செய்வேன்.

இந்த இடத்திற்கு வருவதற்கு தான் நிறைய உழைப்பை கொடுத்திருக்கிறேன். ஆகையால் என்னுடைய முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பேட்டிங் செய்ய வேண்டும். சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று விளையாடினேன்.

செஞ்சுரி அடித்தபோது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. இங்கே வருவதற்கு உதவிய பலருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் இது ஆரம்பம்தான். இன்னும் நிறைய சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட வேண்டும். இந்த உணர்வுபூர்வமான சதத்தை என்னுடைய பெற்றோரக்கு சமர்ப்பிக்கவும் விரும்புகிறேன்.” என்றார்.