“உண்மையை சொல்றேன்.. நாங்களும் இப்படி ரன் எடுத்தோம்.. இது ரூல்ஸ் கிடையாது” – டிராவிட் பேச்சு

0
383
Dravid

ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்த, நேற்றைய இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட மூன்றாவது டி20 போட்டியில், திறமையாகவும், திட்டங்களாகவும் நிறைய சிறப்பான விஷயங்கள் நடைபெற்றது.

ஆனால் இதை தாண்டி போட்டி இரண்டு சூப்பர் ஓவர்களுக்கு சென்ற காரணத்தினால், இரு அணிகளுக்கும் இடையே ஆன போட்டித் தன்மை அதிகமாக இருந்தது. இதனால் வீரர்கள் சற்று உணர்வுவயப்பட்டவர்களாக இருந்தார்கள்.

- Advertisement -

நேற்றைய போட்டியின் முதல் சூப்பர் ஓவரின் கடைசிப் பந்தை முகமது நபி அடிப்பதற்கு தவறவிட்டார், இந்த நேரத்தில் குர்பாஸ் வேகமாக ரன் எடுக்க ஓடினார்.

பந்தை பிடித்த சஞ்சு சாம்சன் நேராக பந்துவீச்சாளர் முனைக்கு அடிக்க, அந்த முனையை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்த முகமது நபி மீது பந்து பட்டு, நேராக நின்ற விராட் கோலி இடம் சென்றது. இதற்குள் அவர்கள் மூன்றாவது ரன்னுக்கு முயற்சி செய்து எடுத்தும் விட்டார்கள்.

இந்த இடத்தில் விராட் கோலி தன்னிடம் வந்த பந்தை எடுத்து த்ரோ செய்யவில்லை. காலில் பட்டு வந்த பந்துக்கு ரன்கள் ஓடுகிறார்கள் என்று புகார் செய்தார். இந்த நேரத்தில் அவர்கள் மூன்றாவது ரன்னை ஓடி விட்டார்கள். அப்பொழுது உள்வட்டத்தில் இருந்த ரோகித் சர்மா முகமது நபியிடம் இது குறித்து கோபமான உரையாடலில் ஈடுபட்டார். களத்தில் அப்பொழுது சில வினாடிகள் பரபரப்பாக மாறியது. த்ரோ செய்யப்படுகின்ற பந்து தெரியாமல் பேட்ஸ்மேன் மேல் பட்டு போனால், பேட்ஸ்மேன் ஓடி ரன் எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும் பொழுது “இப்படியான சில விஷயங்கள் நிகழத்தான் செய்யும். நீங்கள் உங்களுடைய நாட்டுக்கு விளையாடும் பொழுது சில சமயம் மிகுந்த ஆர்வமும் உணர்ச்சியும் இருக்கும். இப்படியான அதி தீவிரமான போட்டியில் போட்டித் தன்மை வெளியில் வருகிறது.

பரவாயில்லை இது விளையாட்டின் ஒரு பகுதிதான். சில சமயங்களில் விரக்தி உண்டானாலும் இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். பந்து பேட்ஸ்மேன் மேல் பட்டு விலகி சென்றது. இந்த நேரத்தில் ரன் போடப்பட்டது.

உண்மையை சொல்வது என்றால் முதல் டி20 போட்டியில் நாங்களும் இப்படி எங்கள் மேல் பந்து பட்டு போனதற்கு ரன்கள் எடுத்தோம். மேலும் இப்படி ரன்கள் எடுப்பதை தடுப்பதற்கு கிரிக்கெட் விதி எதுவும் கிடையாது. ஆனால் இந்த சம்பவங்கள் எல்லாம் விளையாட்டின் ஒரு பகுதிதான்” என்று கூறி இருக்கிறார்.