“ஆஸி பவுலர் யாராவது குறி வைப்பேன்.. இல்லனா ருதுராஜ்கிட்ட மாத்தி விட்ருவேன்..!” – இஷான் கிஷான் சுவாரசிய பேச்சு!

0
9095
Ruturaj

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்ட பொழுது, எல்லோரும் எதிர்பார்த்த விஷயம் ஜெய்ஸ்வால் இடம்பெற்றால் இஷான் கிஷானுக்கு இடம் இருக்காது என்பதுதான்.

ஏனென்றால் இருவருமே இடதுகை துவக்க ஆட்டக்காரர்கள். எனவே இருவரில் ஒருவருக்குதான் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வேறு மாறியாக யோசித்தது.

- Advertisement -

நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இருவரும் விளையாடியிருக்கிறார்கள். ஜெய்ஷ்வால் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்க, இஷான் கிஷான் மூன்றாவது வீரராக ஒரு விக்கெட் விழுந்ததும் உள்ளே வருகிறார்.

மேலும் இவர் இடதுகை பேட்ஸ்மேனாக இருக்கின்ற காரணத்தினால், லெக் ஸ்பின்னரை குறி வைத்து அடிப்பதற்கு வசதியாக இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் மிடில் வரிசையில் வீசப்படும் இப்படியான பந்துவீச்சை தாக்குவதற்கு என்றே மூன்றாவது இடத்தில் இடதுகை பேட்ஸ்மேன்கள் தேவைப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு போட்டிகளிலும் இஷான் கிஷான் ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்து, இறுதியில் அதிரடியாக முடித்தார். மேலும் அவர் கடந்த இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக அரைசதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து இஷான் கிஷான் கூறும்பொழுது “ஓப்பனிங் மற்றும் ஒன்-டவுனில் ஒரே சமயத்தில் விளையாடிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் ஒரு விக்கெட் விழுந்ததும் உள்ளே வரும் பொழுது சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் உள்ளே சென்றதும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது கடினமானது.

ஆரம்பத்தில் இதற்கு நானும் கொஞ்சம் சிரமப்பட்டேன் போல. ஆனால் எந்த பந்துவீச்சாளர்களை அடிக்க வேண்டும் என்று ருத்ராஜுடன் பேசி வைத்த பிறகு எல்லாம் நன்றாக மாறியது.

அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சாளரை என்னால் விளையாட முடியாத பொழுது, நான் அந்த பந்துவீச்சாளரை அடித்து விளையாட ருதுராஜிடம் சொன்னேன்.

நீங்கள் விக்கெட்டுக்கு நடுவில் கலந்து உரையாடி யாரை யார் தாக்குவது என்று முடிவு செய்வது மிகவும் சிறப்பான ஒன்று. இது பெரிய வித்தியாசத்தை உருவாக்கக் கூடியது!” என்று கூறியிருக்கிறார்!