இந்த இந்திய வீரரை நோக்கி விரல் நீட்ட மாட்டேன்.. விமர்சிக்க மாட்டேன்” – கவாஸ்கர் எடுத்த புது சபதம்!

0
528
Gavskar

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டி மழையால் நடைபெறாதது ஒருபுறம் ஏமாற்றம் என்றால், இன்னொரு புறத்தில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் செயல்பட்ட விதம் இந்திய ரசிகர்களையும், இந்திய அணி நிர்வாகத்தையும் ஏமாற்றி இருக்கிறது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்கு வீசப்பட்ட பந்து மட்டுமே விக்கெட்டை பெறக்கூடிய ஒன்றாக இருந்தது. மற்ற மூவர்களும் விக்கெட்டை கொடுத்த விதம் மிகவும் மலிவான ஒன்றாக இருந்தது. வீரர்கள் ஆட்டம் இழக்கும் முறை இந்திய அணி நிர்வாகத்தை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது!

- Advertisement -

அந்தப் போட்டியில் மிகவும் இக்கட்டான நிலைமையில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் கே எல் ராகுல் இல்லாத காரணத்தால் அணியில் இடம் பெற்ற விக்கெட் கீப்பிங் இடது கை பேட்ஸ்மேன் இசான் கிஷான் செயல்பட்டார். துவக்க வீரராக சில வாய்ப்புகளை பெற்று வந்த அவர், நடு வரிசையில் சிறப்பாக செயல்பட்ட விதம் உண்மையில் இந்திய அணி நிர்வாகத்தை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

அதே சமயத்தில் இஷான் கிஷான் பேட்டிங் சிறப்பாக இருந்ததற்கு இன்னொரு காரணமாக, அனுபவ வீரர் ஹர்திக் பாண்டியா அவரை களத்தில் சரியாக வழிநடத்தியதும் இருக்கிறது. இஷான் கிஷான் உடன் இணைந்து அவரை வழிநடத்தியது மட்டுமில்லாமல், தேவைக்கு சரியான ரண்களை எடுத்து இன்னிங்ஸை மிகச் சரியாக நகர்த்தி, தனது தரத்தைக் காட்டி இருந்தார் ஹர்திக் பாண்டியா.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் லெஜன்ட் கவாஸ்கர் கூறும் பொழுது ” நெருக்கடியான சூழ்நிலையில் வந்து 82 ரன்கள் சேர்த்து ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைய காரணமாக இருந்த இளைஞர் இசான் கிசானுக்கு பெருமைகள் சேர வேண்டும். அவருக்கு காயம் ஏதாவது சிறியதாக இருந்திருக்க வேண்டும், அதனால் அவரால் விக்கெட்டுக்கு இடையில் வேகமாக ஓட முடியவில்லை. இதன் காரணமாக அவர் பவுண்டரி அடிப்பதை விரும்பினார். இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

- Advertisement -

இதற்காக நான் அவரை நோக்கி விமர்சனம் செய்யும் நோக்கத்தில் விரலை நீட்ட மாட்டேன். நான் அந்த இளைஞர் முதுகில் தட்டிக் கொடுத்து ‘நீ நன்றாக செயல்பட்டாய்’ என்றுதான் கூறுவேன்.

அந்தக் குறிப்பிட்ட பார்ட்னர்ஷிப்பில் இசான் கிஷான் ஹர்திக் பாண்டியா வழி நடத்தியதற்காக அவரை மீண்டும் பாராட்டுவது மிக அதிகமான ஒன்றாக இருக்காது. மேலும் அவர் தானே முன்நின்று ரன்களை பவுண்டரிகள் மூலம் எடுத்ததோடு, ஒன்று இரண்டு எனவும் ரன்கள் எடுத்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். இது அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறான அற்புதமான இன்னிங்ஸ்!” என்று கூறி இருக்கிறார்!