“என் வீரர்கள்கிட்ட வாலாட்டினா விடமாட்டேன்” – கோலி பிரச்சனையை 7 மாதத்திற்கு பின் இழுத்த கம்பீர்!

0
235
Gambhir

இந்திய கிரிக்கெட்டில் எப்பொழுதும் விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஓய்வு பெற்ற பிறகும் ஓயாமல் இருக்கக்கூடிய வீரராக இந்திய அணியின் முன்னாள் இடது கை துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் இருக்கிறார்!

விராட் கோலி தனது முதல் சதத்தை அடித்த பொழுது, அதே போட்டியில் சதம் அடித்த கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. அப்பொழுது என்னைவிட வளரும் வீரருக்கு ஆட்டநாயகன் விருது முக்கியம் என்று விராட் கோலிக்கு விட்டுக் கொடுத்தார்.

- Advertisement -

அதே சமயத்தில் ஆரம்பத்தில் ஐபிஎல் தொடரில் விராட் கோலி உடன் பெரிய வாய் தகராறு ஏற்பட, மைதானத்தில் இருவரையும் வீரர்கள் வந்து விலகிவிடும் அளவுக்கு மாறியது.

சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்ற பொழுது கம்பீருக்கு பாகிஸ்தான் அணியுடன் எப்பொழுதும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. மேலும் பாகிஸ்தான் அணியின் சாஹித் அப்ரிடி உடன் மோதல் போக்கு நீடித்து வந்தது.

- Advertisement -

இதற்கடுத்து ஓய்வு பெற்ற பிறகு தோனியை குறிவைத்து அவர் சில சர்ச்சையான கருத்துக்களை மறைமுகமாக தொடர்ச்சியாக பேசி வருவது, சமூக வலைதளத்தில் இயங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்த ஒன்று.

இந்த நிலையில்தான் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் மென்டராக வந்த கம்பீருக்கும் விராட் கோலிக்கும் இடையே களத்தில் மிக சூடான வார்த்தை பரிமாற்றங்கள் நடைபெற்று, மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலான நிகழ்வாக மாறியது.

அந்தக் குறிப்பிட்ட போட்டியில் விராட் கோலி மற்றும் லக்னோ அணியின் நவீன் உல் ஹக் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் தொடக்கம், இறுதியாக விராட் கோலி மற்றும் கம்பீர் என மாறிப்போனது.

அந்த நிகழ்வு நடந்து விராட் கோலி மற்றும் நவீன் இருவரும் சமாதானம் ஆகி, மேலும் 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில் கம்பீர் அதைப்பற்றி கூறும் பொழுது ” எனது வீரர்களிடம் யாரும் தவறாகப் பேசி நடக்க முடியாது. ஒரு மென்டராக நான் விடமாட்டேன்.

எனக்கு எப்பொழுதும் வித்தியாசமான ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆட்டம் முடியும் வரை நான் எந்த விஷயத்திலும் தலையிட மாட்டேன். ஆட்டம் முடிந்த பின்னும் எங்கள் வீரர்களுக்கு எதிராக யாராவது காரசாரமான விவாதத்தில் இறங்கினால், அவர்களைப் பாதுகாக்கும் அனைத்து உரிமைகளும் எனக்கு இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -