“ரிங்கு கூட பேசிக்கிட்டே இருந்தேன்.. நாங்க ஒரு விஷயத்துல காம்ப்ரமைஸ் பண்ணிக்கல” – ரோகித் சர்மா பேட்டி

0
1029
Rohit

இந்தியாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை, இன்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றி இருக்கிறது.

இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு முதல் நான்கு விக்கெட்டுகள் 22 ரன்களுக்கு விழுந்துவிட்ட நிலையில். ரிங்கு சிங்கை உடன் வைத்துக்கொண்டு கேப்டன் ரோஹித் சர்மா மிகப் பிரமாதமான டி20 இன்னிங்ஸ் விளையாடினார்.

- Advertisement -

இறுதி வரை ஆட்டமிழக்காமல் 69 பந்துகளில் 121 ரன்கள் குவித்தார். உடன் இணைந்து விளையாடிய ரிங்கு சிங்கு தன் பங்குக்கு ஆட்டம் இழக்காமல் 39 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார்.

இந்த ஜோடி 100 பந்துகளில் 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. மேலும் கடைசி 30 பந்துகளில் மட்டும் 103 ரன்கள் குவித்தது. இந்த ஜோடியின் அசாதாரண மீட்பு ஆட்டத்தின் காரணமாகவே, இரண்டு சூப்பர் ஓவர்கள் சென்ற போட்டியில் இந்திய அணியால் வெல்ல முடிந்தது. இல்லையென்றால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கே சென்று இருக்காது.

இந்த நிலையில் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்ற கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது “டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட ஒரு நாளில் மூன்று முறை பேட்டிங் செய்யமாட்டோம். இது ஐபிஎல் தொடரில் ஒரு முறை நடந்தது என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவது முக்கியமாக இருந்தது. இந்த எண்ணத்தை இழக்காமல் ரிங்கு சிங்குடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தேன். பெரிய ஆட்டங்களில் 30 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் என்று இருந்தால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இதன் மூலம் காணலாம். இப்படி ஆன போட்டிகளில் அழுத்தம் இருப்பது நல்லது.

இந்த சூழ்நிலையில் நீண்ட நேரம் பேட்டிங் செய்வதும் ஆழமாக ஆட்டத்தை எடுத்துச் செல்வது முக்கியம். ஆனால் நாங்கள் அடித்து விளையாட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் மட்டும் சமரசம் செய்து கொள்ளவில்லை.

ரிங்கு சிங் விளையாடிய கடைசி இரண்டு தொடர்களில் அவரால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டிவிட்டார். எந்த பயமும் இல்லாமல், தன்னைத்தானே நிதானமாக வைத்துக் கொண்டு தனது விளையாட்டு திட்டத்தைப் பற்றி தெளிவாக இருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சிறப்பாக செயல்படுகிறார்.

இந்தியாவுக்காக கடைசி 10 இன்னிங்ஸ்களில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். தெளிவான மனநிலையுடன் பேட்டிங் பின் வரிசையில் விளையாடுவதற்கு எங்களுக்கு ஒரு வீரர் வேண்டும். ஐபிஎல் தொடரில் அவர் எப்படி செயல்பட்டார் என்று பார்த்தீர்கள். அதை எங்கும் அவர் முன்னெடுத்து செல்கிறார்” என்று பாராட்டி கூறியிருக்கிறார்.