இனி அப்படி கொண்டாட கூடாதுனு இருந்தேன்.. ஆனா இன்னைக்கு பண்ண காரணம் இதுதான்.. தென் ஆப்பிரிக்க வீரர் ஷம்சி விளக்கம்!

0
557
Shamsi

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இன்று ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இன்று இந்திய அணி டாசை இழந்து பேட்டிங் செய்ய வந்த பொழுது, வானம் மேகமூட்டமாக இருந்த காரணத்தினால் பந்து வீச்சுக்கு சிறிது சாதகம் இருந்ததாக தெரிந்தது. குறிப்பாக இந்த ஆடுகளம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவு ஒத்துழைக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் ரன் இல்லாமல் வெளியேற, அடுத்து திலக் வர்மா மற்றும் சூரியகுமார் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். இதில் திலக் வர்மா வெளியேற, ரிங்கு சிங் வந்து ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி நல்ல நிலைக்கு கொண்டு சென்ற பொழுது, ஆடுகளத்தை பயன்படுத்தி மிகச் சிறப்பாக பந்து வீசிய, தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி சூரியகுமார் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் இந்திய அணியின் ரன் வேகம் தடைப்பட்டது.

- Advertisement -

மேலும் அவர் சூரியகுமார் விக்கெட்டை கைப்பற்றியதும் தன்னுடைய ஷூவை கழட்டி போன் செய்வது போல நடித்துக் காட்டினார். இது கொஞ்சம் களத்தில் அவமரியாதை செய்வது போல தோன்றியது.

மேலும் அவர் நான்கு ஓவர்கள் பந்துவீசி, 13 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து ஒரு விக்கெட் உடன் தனது ஸ்பெல்லை முடித்துக்கொண்டார். இவர் ரன் வேகத்தை குறைத்தது தென் ஆப்பிரிக்க அணி வெல்வதற்கு காரணமாக அமைந்தது. எனவே இவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

வெற்றிக்குப் பின், ஏன் அவ்வாறு விக்கெட்டை கொண்டாடினார் என்று ஷம்சி கூறும் பொழுது “நான் அப்படியான கொண்டாட்டத்தை நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால் குழந்தைகள் அந்த மாதிரி செய்யும்படி தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களை என்னால் ஏமாற்ற முடியவில்லை. அதனால்தான் அப்படி செய்தேன்.

என்னுடைய வேலை சரியான இடத்தில் தொடர்ந்து பந்தை வைப்பதுதான். இந்தியாவுக்கு எதிராக அழுத்தத்தின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சூரியகுமார் மிகச் சிறந்த வீரர். இன்றும் அவர் அதை காட்டினார்.

களத்தில் எங்கள் கேப்டன் மார்க்ரம் மிகச் சிறப்பான மாற்றங்களை செய்து கொண்டே இருந்தார். அந்த மாற்றங்கள் அற்புதமாக இருந்தது. எங்கள் அணியில் தற்பொழுது நல்ல நேர்மறையான சூழல் காணப்படுகிறது. அணி நிர்வாகத்தில் ராப் உள்ளே வந்தவுடன், எங்கள் குடும்பத்தாரையும் எங்களுடன் இருக்க அனுமதித்தார். இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியான கிரிக்கெட் விளையாடி, வெற்றி பெற முயற்சிப்பதை நீங்கள் பார்க்கலாம்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -