ஆர்சிபி போட்டியில் முத்தம் கொடுத்து செலிபிரேட் பண்ண காரணம் இதுதான் – வெங்கடேஷ் ஐயர் விளக்கம்

0
441

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி நிர்ணயித்த 182 ரன்கள் இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி இன்னிங்சைத் தொடங்கிய பெங்களூர் அணியின் விராட் கோலி மற்றும் டு பிளஸ்சிஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கம் அளிக்க தவறினர். இரு போட்டிகளில் சொதப்பிய கேப்டன் இந்த போட்டியிலும் தடுமாறினார். எட்டு ரன்கள் மட்டும் குவித்த நிலையில் அவர் வெளியேற, அதற்கு பின்னால் வந்த கேமரூன் கிரீன் விராட் கோலி உடன் பாட்னர்ஷிப் அமைத்தார்.

- Advertisement -

33 ரன்கள் குவித்த நிலையில் கேம்ரூன் கிரீன் வெளியேற, அதற்கு பின்னர் வந்த ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடி 28 ரன்கள் குவித்தார். பின்னர் இறுதிக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் விராட் கோலி கூட்டணி சிறப்பாக விளையாடி 182 ரன்கள் குவித்தது. இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார்.

பின்னர் 183 ரன்கள் கொல்கத்தா அணிக்கு கடினமாக இருக்கும் என்று நினைத்து பெங்களூரு அணி பந்து வீச்சாளர்கள் பந்து வீச, தொடக்க ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்து நிலையில் அடுத்ததாக வெங்கடேஷ் ஐயர் களம் இறங்கினார். முதல் போட்டியில் விரைவிலேயே அவுட் ஆனதால் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.

வெறும் 30 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு மூன்று பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் என்று 50 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதனால் கொல்கத்தா அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வெங்கடேஷ் ஐயர் அரை சதம் அடித்தவுடன் பெவிலியனை நோக்கி மைதானத்திலேயே பறக்கும் முத்தங்களை கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் நிரூபிர் சந்திப்பின்போது பறக்கும் முத்தம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அதை தனது வருங்கால மனைவிக்கு கொடுத்ததாகவும் இந்த அரை சதத்தினை அவருடன் சேர்ந்து கொண்டாடுவதாகவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

வெங்கடேஷ் ஐயர் விளக்கம்

“இது ஒரு சிறப்பான நாளாக நான் கருதுகிறேன். ஏனெனில் எனது வருங்கால மனைவியும் போட்டியை காண இங்கே வந்திருக்கிறார். நான் முத்தங்களை கொடுத்தது அவருக்காகதான். எனவே நான் அடித்த அரைசதத்தினை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று கிரிக்கெட் மைதானத்தில் தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கும் ஸ்ருதி ரகுநாதன் என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் நிச்சயம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2024 ஐபிஎல் தொடரில் வரலாறு மாறியது.. 10வது போட்டியில் ஆர்சிபி தந்த மாற்றம்.. புதிய துவக்கம்

பெங்களூர் அணி இத்தகைய பந்துவீச்சினை வைத்துக்கொண்டு இனி வரும் போட்டிகளில் வெல்வது கடினம். பிளே ஆப் சுற்றுக்கு அணி தகுதி பெற விரும்பினால் பந்துவீச்சை வலுப்படுத்த வேண்டியது கட்டாயம் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் உட்பட பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுவரை மூன்று போட்டியில் விளையாடியுள்ள பெங்களூர் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.