இந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் சஞ்சு சாம்சன் குறித்து கவுதம் கம்பீர் பேசியிருக்கிறார்.
சஞ்சு சாம்சங் ஒரு உலகக் கோப்பை தொடருக்கு முதன்முறையாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு கடந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அணியில் இடம் கிடைத்தது. டி20 தொடருக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஆனால் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அற்புதமான சதம் ஒன்றை அடித்தார். அங்கிருந்து அவருக்கு எல்லா விஷயங்களும் நல்ல வழியில் செல்ல ஆரம்பித்தது. தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து, பிளே ஆப் சுற்றுக்கு அணியை கொண்டு வந்திருக்கிறார். மேலும் 500 ரன்கள் தாண்டி பேட்டிங்கிலும் அடித்திருக்கிறார். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டனாகவும் இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் சஞ்சு samsung குறித்து பேசி இருக்கும் கவுதம் கம்பீர் கூறும் பொழுது ” இப்போது நீங்கள் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறீர்கள். உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கும்போது அதைக் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். இப்போது நீங்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் புதிய வீரர் கிடையாது.
சஞ்சு சாம்சன் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் விளையாடி அனுபவம் கொண்டவராக இருக்கிறார். இப்போது உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தொடரில் நீங்கள் சிறப்பாக விளையாடும் பொழுது, உலகத்திற்கு உங்களை வெகு சீக்கிரத்தில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அமைகிறது. இங்கு வீரரின் தரம்தான் முக்கியம். ஒரு வீரரின் தரத்தை தெரிந்து கொள்ள ஐந்து நிமிடங்கள் போகும். சஞ்சு சாம்சன் தரமான வீரர்.
இதையும் படிங்க : தோனி நல்லா டிராமா பண்ணுவாரு.. தோனியின் ஓய்வு குறித்த கேள்வி.. சிஎஸ்கே மைக் ஹசி பதில்
நீங்கள் மனதளவில் உறுதியாகவும் மேலும் திறமையானவராகவும் இருக்கிறீர்கள். இப்படி இல்லாவிட்டால் உங்களால் இங்கு அதிக நாட்கள் நீடிக்க முடியாது. இவருக்கு நல்ல விஷயம் பிட்னஸ், பவர் ஹிட்டிங், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி என எல்லாவற்றிலும் சரியாக இருக்கிறது. மேலும் கேப்டனாக ஒரு அடி கூட அவர் தவறாக வைக்கவில்லை. கேப்டனாக இருப்பதின் காரணமாக முடிவெடுப்பது மற்றும் சூழ்நிலைகளை புரிந்து கொள்வதில் முன்னேற்றம் அமைகிறது. கேப்டன்சி சிறப்பாக செய்வதால், டி20 உலக கோப்பையில் சந்து சாம்சன் பேட்டிங்கில் அது எதிரொலிக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.