ராஜஸ்தான் வீரர் அணிந்த விசித்திரப் கருவி.. வியக்க வைக்கும் காரணம்.. கிரிக்கெட் உலகில் வரவேற்பு

0
4868

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக பட்லருக்கு பதிலாக அதே இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாம் கோஹ்லர் காட்மோர் இடம்பெற்றார்.

ஆனால் அவர் பட்லரின் இடத்தை முழுமையாக நிரப்ப முடியவில்லை. 23 பந்துகளை எதிர்கொண்ட காட் மோர் 18 ரன்கள் மட்டுமே குவித்து அவுட் ஆகி வெளியேறினார். அவரது ஆட்டம் மறக்க செய்யும்படி இருந்தாலும் அவர் அணிந்திருந்த நெக் பேண்ட் அனைவரது கண்களையும் கவர்ந்தது. மேலும் அவர் இதை எதற்காக பயன்படுத்துகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

வருகிற டி20 உலக கோப்பை காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் ராஜஸ்தான் அணியில் இருந்து விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாம் கோஹ்லர் காட்மோர் இடம்பெற்றார். அவர் கழுத்தில் அணிந்திருந்த கருப்பு நிற பேண்ட் தற்போது அனைவரிடமும் பேசு பொருளாக மாறி உள்ளது.

ஆனால் காட் மோர் இந்த பேண்டை ஹன்ட்ரட், ஐஎல்டி20 மற்றும் பிக் பாஷ் லீக் உட்பட அனைத்து கிரிக்கெட் தொடர்களிலும் பயன்படுத்தி வருகிறார். இது ஃபேஷனா? அல்லது அவரது உடல் நிலையை கண்காணிப்பதற்காகவா? என்று கேள்வி எழுந்துள்ளது. விராட் கோலி உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடல் நிலையை கண்காணிப்பதற்காக ஹூப் பேண்ட் பயன்படுத்தி வரும் வேளையில் இந்த கியூ காலர் பேண்ட் தலையில் ஏற்படும் காயங்களை குறைப்பதற்காக அணியப்படும் சாதனமாகும்.

- Advertisement -

இது Q30 இன்னோவேஷன்ஸ் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த சாதனம் பெரும்பாலும் அமெரிக்க கால்பந்து வீரர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை தற்போது பயன்படுத்தி வரும் முதல் கிரிக்கெட்டர் காட்மோர் ஆவார். இந்த சாதனமானது தலையில் எதிர்பாராத விதமாக பந்து படும்போது மூளை பாதிப்பதை தவிர்க்க உதவுகிறது. இது கழுத்து நரம்புகளுக்கு சிறு அழுத்தத்தை கொடுத்து இது தலையில் உள்ள ரத்தத்தின் அழுத்தத்தை சிறிது அதிகரிக்கச் செய்து மூளையின் தாக்கத்தின் போது அதன் இயக்கத்தை சற்று குறைக்க செய்கிறது.

இதையும் படிங்க:வெளியேறிய வில் ஜேக்ஸ்.. ஆர்சிபி-யின் புதிய உத்தேச பிளேயிங் XI.. சிஎஸ்கேவை சாய்க்குமா?

இதை தற்போது காட்மோர் பயன்படுத்தி வரும் வேளையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் சமூகத்திற்கும் இது நல்லதாக பார்க்கப்படும். இதன் மூலம் இவரையே அனைவரும் பின்பற்றுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை தற்போது 199 அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 16,517 ரூபாய் ஆகும். ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரரான பிளிப் ஹியூக்ஸ் தலையில் ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்த சம்பவம் நினைவிருக்கலாம்.

- Advertisement -