“ரிஸ்வானை விளையாட்டு மைதானத்தில் நமாஸ் பண்ண சொன்னது யாரு? – பாக் டேனிஷ் கனேரியா பிசிபி மீது தாக்கு!

0
873
Rizwan

இந்தியா பாகிஸ்தான் அணிகள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மோதிக்கொண்ட போட்டியில் சில சம்பவங்கள் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கி இருக்கிறது!

பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ஆட்டம் இழந்து மைதானத்தை விட்டு உள்ளே செல்லும் பொழுது அந்த வழியில் இருந்த இந்திய ரசிகர்கள் தங்களது மதக்கோசத்தை அவரை நோக்கி எழுப்பினார்கள்.

- Advertisement -

இது பாகிஸ்தான் தாண்டி இந்தியாவிலேயே பெரிய விமர்சனங்களை கொண்டு வந்தது. இந்த விஷயத்திற்கு இந்தியாவிற்குள் ஆதரவு எதிர்ப்பு என்று இரு பிரிவாக மக்கள் பல கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்கள். இந்த பிரச்சனை இதுவரை கூட முடியவில்லை.

மேலும் இது சம்பந்தமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி இடம் புகார் அளிக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதை உண்மையாக்கும் விதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி இடம் நேற்று இது குறித்து தன்னுடைய புகாரை அளித்திருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு உலக கோப்பையை பார்க்க இந்தியா விசா வழங்காதது மற்றும் ரிஸ்வான் மீது மதக்கோசம் எழுப்பி பிரச்சனை செய்தது என்பது குறித்து புகாராக கூறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தரப்பில் கூறப்படும் பொழுது “இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழு தலைவர் ஜகா அஷ்ரப் கலந்து கொண்டார். அவர் அங்கு நடந்த சில நிகழ்வுகளுக்கு நேரடி சாட்சியமாக இருக்கிறார். அவருக்கு அங்கு கிரிக்கெட் அதிகாரிகள் நல்ல வரவேற்பு கொடுத்த பொழுதும் கூட, நடந்தவைகள் அவருக்கு மகிழ்ச்சியற்றதாக இருக்கிறது!” என்று கூறப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து பாகிஸ்தான அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் டேனிஸ்கனேரியா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை மிக கடுமையாக சாடி தன்னுடைய கருத்தை முன் வைத்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது “பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஜைனஸ் அப்பாஸ் இந்தியாவுக்கும் இந்துக்களுக்கும் எதிராக யார் கருத்தை பதிவு செய்ய சொன்னது? ஐசிசி நிகழ்வை பிசிசிஐ நிகழ்வு என்று மிக்கி ஆர்தரை யார் சொல்ல சொன்னது? ரிஸ்வானை விளையாட்டு மைதானத்தில் நமாஸ் செய்ய சொன்னது யார்? மற்றவர்களின் குறைகளை மட்டுமே பார்க்காதிர்கள்!” என்று கூறி இருக்கிறார்!