இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையில் 4-1 எனக் கைப்பற்றி அசத்தியிருக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவின் முடிவடைந்து மூன்று நாட்களிலேயே இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதி கொண்ட 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது.
இந்த தொடரில் முதல் நான்கு போட்டிகளில் இந்திய அணி மூன்று போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 5வது போட்டி நடைபெற்றது.
ஆஸ்திரேலியா டாஸ் வெல்ல முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு நூத்தி 160 ரன்கள் எடுத்தது. உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியில் 53 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆஸ்திரேலியா களம் இறங்கி சிறப்பாக விளையாட இந்த போட்டி பரபரப்பான நிலைமைக்கு மாறி கடைசி ஓவருக்கு சென்றது. கடைசி ஓவரை வீசிய அர்ஸ்தீப் சிங் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுத்தர இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் வேளையில் இந்திய அணி பரிசோதனை முயற்சியில் சந்தித்த இந்த தொடர் வெற்றி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வெற்றிக்குப் பின் பேசிய சூரியகுமார் யாதவ் கூறும்பொழுது “இது நல்ல தொடராக அமைந்தது. வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நாங்கள் போட்டியில் இருக்கும் பொழுது பயமின்றி இருக்க நினைத்தோம். சின்னசாமி மைதானத்தில் நான் பல ஆட்டங்களை பார்த்திருக்கிறேன். 10 ஓவர் தாண்டியதுமே இங்கு 165 -170 ரன்கள் சவாலாக இருக்கும் என்று வீரர்களிடம் சொன்னேன். நாங்கள் நினைத்தபடி விளையாடியதில் மகிழ்ச்சி அடைகிறோம்!” என்று கூறி இருக்கிறார்!