“குல்தீப்கிட்ட டேஞ்சர் வேணாம்னு சொன்னேன்.. ஆனா அவர் செஞ்சிட்டாரு!” – அஸ்வின் வெளியிட்ட ஆச்சரியமான தகவல்!

0
2518
Ashwin

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. தற்பொழுது இந்திய அணி இலங்கையில் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் விளையாடி வருகிறது!

இந்த தொடரில் இந்திய அணி உலகக்கோப்பைக்கு எந்தெந்த கட்டங்களைச் சரி செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் மிக வேகமாகச் சரிசெய்து இருப்பதாகத் தெரிகிறது.

- Advertisement -

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் நல்ல ஃபார்முக்கு திரும்பி வந்திருக்கிறார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஃபார்முக்கு வந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மிகச் சிறப்பாக இருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் இந்திய அணியின் பௌலிங் யூனிட்டை எடுத்துக் கொண்டால், காயத்திலிருந்து திரும்பிய பும்ரா, சிராஜ், ஹர்திக், சர்துல் என எல்லோரும் சிறப்பாக இருக்கிறார்கள்.

இதில் இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் ஒரு சிறப்பு ஆயுதமாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இருந்து வருகிறார். அவரது பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கணிக்க முடியாத ஒன்றாக அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. நடப்பு ஆசியக்கோப்பை தொடரில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

இவர் குறித்து இந்திய அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது
” சில கிரிக்கெட் வர்ணனையாளர்கள் குல்தீப் யாதவ் தான் பந்துவீசும் கோணத்தை எவ்வாறு மாற்றி இருக்கிறார் என்று பேசினார்கள். நான் குல்தீப் இடம் அப்படி செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தேன். ஏனென்றால் காயமடைய அதிக வாய்ப்பு உண்டு. ஆனால் அவர் அந்த கடினமான வேலையை செய்து இருக்கிறார்.

அதனால் அவர் பந்து வீசும் வேகம் அதிகரித்து இருக்கிறதா? அப்படி பெரிதாக வேகம் அதிகரிக்கவில்லை. ஆனால் அவர் பந்து வீசும் லைனில் மட்டும் மாற்றம் உண்டாகி இருக்கிறது. மேலும் அவரை ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் வீச சொல்கிறார்கள். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அப்படியெல்லாம் வீச முடியாது.

குல்தீப் இயல்பாகவே காற்றில் மெதுவாக வீசுவார். அதுதான் அவருடைய பலம். பேட்டர்தான் வேகத்தை உருவாக்கி அடிக்க வேண்டும். மேலும் அவர் காற்றில் மெதுவாக வீசினாலும் பந்தை இருபுறமும் திருப்புகிறார். குல்தீப்பை வேகமாக வீசச் சொன்னால் அவர் அவருடைய பலத்தை இழப்பார் என்று கூறியிருக்கிறார்!