நேர்மையாக இந்திய அணியால் வெற்றிபெற முடியாது, மோசமான பிட்ச் தயார் செய்து ட்ரிக் பண்ணி ஜெயிப்பார்கள் – முன்னாள் வீரர் கருத்து!

0
1526

மைதானத்தில் குளறுபடி பண்ணி மட்டுமே இந்திய அணியால் ஆஸ்திரேலியாவை வெற்றி பெற முடியும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் ஹீலே.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற உள்ள பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி துவங்குகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளது.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்த டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய அணிக்கு இது எவ்வளவு முக்கியம் என்றால், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 2-1 என்ற கணக்கில் குறைந்தபட்ச வெற்றியை பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியாக வேண்டும்.

ஆஸ்திரேலியா அணிக்கு எந்தவித கவலையும் இல்லை. ஏற்கனவே அவர்கள் தகுதி பெற்றுவிட்டார்கள். ஆகையால் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

இதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். குறிப்பாக மோசமான பிட்ச் தயார் செய்து எதிரணியை திட்டமிட்டு வீழ்த்துவார்கள் என்று கடும் சொற்களை உதிர்த்துள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் இயான் ஹீலே.

- Advertisement -

“வழக்கமான இந்திய துணை கண்டங்களில் இருக்கும் பிட்ச் போல இருந்தால் இப்போது இருக்கும் ஆஸ்திரேலியா அணியை இந்தியா அணியால் வீழ்த்த முடியாது. அனைத்து விதங்களிலும் டாப்பாக இருக்கின்றார்கள்.

இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். ஆகையால் இதை வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பிட்ச்சில் நுணுக்கமான வேலைத்தனங்களை காட்டுவார்கள். வழக்கத்திற்கு மாறான பவுன்ஸ் மற்றும் டர்ன் இருக்கும் அளவிற்கு தயார் செய்வார்கள்.

அவர்களது சுழல் பந்துவீச்சாளர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு இருக்கக்கூடிய பிட்ச்சை கொண்டு வந்து எதிரணியை வீழ்த்துவார்கள். நேர்மையான முறையில் இந்த ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துவது கடினம் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.” என பேசியுள்ளார்.