“எனக்கு அக்சர் படேல் விளையாடக்கூடாது..  அதுக்கு காரணம் இருக்கு” – ஹர்பஜன் திடீர் கருத்து

0
72
Harbajan

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி வருகின்ற 25ஆம் தேதி துவங்குகிறது.

இந்த போட்டிக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் மொத்தம் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அதில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் என மூன்று சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதில் பிரதான சுழற் பந்துவீச்சாளராகவும் அதே சமயத்தில் ஒரே மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளராகவும் குல்தீப் யாதவ் மட்டுமே இடம் பெற்று இருக்கிறார். கடந்த முறை பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது பெற்றவர், இரண்டாவது டெஸ்டில் கழட்டி விடப்பட்ட சம்பவம் நடந்தது.

தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா உடன் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக யார் விளையாட வேண்டும் என்கின்ற தனது விருப்பத்தை ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” நீங்கள் ரவிச்சந்திரன் அஸ்வினையும் ரவீந்திர ஜடேஜாவையும் வைத்து விளையாடும் போது, உங்களுடைய பிளேயிங் லெவன்த் மூன்றாவது பிரதான சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ்தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

ஏனென்றால் அவர் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் என்கின்ற இன்னொரு வகையை கொண்டு வருகிறார். ஆனால் அக்சர் படேல் விளையாடும் அணியில் இடம் பெறுவது அவருடைய பேட்டிங் திறமையின் காரணமாகத்தான். அவர் எட்டு மற்றும் ஒன்பதாம் இடங்களில் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்.

உங்களுக்கு அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் பேட்டிங் செய்கின்ற பொழுது, ஒன்பதாவது இடத்திலும் பேட்டிங் தேவையில்லை. எனவே அங்கு குல்தீப் யாதவ் விளையாடுவது சரியான ஒன்றாக இருக்கும். மேலும் ஜடேஜாவும் அக்சர் படேலும் ஒரே மாதிரி பந்து வீசக்கூடியவர்கள். இதன் காரணமாக குல்தீப் விளையாடுவது சரி.

நன்றாகத் திரும்பக் கூடிய விக்கெட்டுகளில் பந்தை இலக்கு நோக்கி குறி வைத்து தவறாமல் வீசக்கூடிய துல்லியமான ஒரு பந்துவீச்சாளர் தேவை. ஏனென்றால் இப்படியான விக்கெட்டுகளில் பந்தை திருப்பக் கூடாது. இந்த வேலையை அக்சர் சரியாக செய்கிறார். மேலும் இப்படியான விக்கெட்டுகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை. எனவே பேட்டிங் நீளம் தேவைப்படுகிறது. இதனால்தான் அக்சர் வாய்ப்பு பெறுகிறார்” என்று கூறி இருக்கிறார்.