மற்ற பந்துவீச்சாளர்கள் எல்லாம் ஓகே ஆனால் இந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வந்தால் மட்டும் எனக்கு பயமாக இருக்கும் – மஹேல ஜெயவர்தனே

0
145

இலங்கை அணியில் விளையாடிய வீரர்கள் மற்றும் மஹேல ஜெயவர்தனே எவ்வளவு சிறப்பாக விளையாடிய வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். உலக கோப்பை தொடர்களில் அவரது பேட்டிங் இலங்கை அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறது. இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கிய வீரராக அவர் அப்போது விளையாடியுள்ளார்.

தடுப்பாட்டம் போட்டு நிதானமாக விளையாடுவதில் கில்லியாக இருக்கும் அவர் ஒரு பந்துவீச்சாளருக்கு எதிராக தான் சிரமப்பட்டதாகவும் அவருக்கு தான் பயந்ததாகவும் தற்பொழுது கூறியிருக்கிறார்.

- Advertisement -

இவருக்கு தான் நான் நிறைய பயந்து இருக்கிறேன்

பாகிஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் பந்து வீச வந்துவிட்டாலே எதிரணி பேட்ஸ்மேன்கள் சிறிய நடுக்கத்தை வெளிப்படுத்துவார்கள். அவரைப் பார்த்துதான் தான் பயந்ததாக தற்பொழுது மஹேல ஜெயவர்தன கூறியிருக்கிறார்.

“எப்பொழுதும் ஒரு துளி வேகம் கூட குறையாமல் தொடர்ந்து வந்து பேசுவதில் அவர் கெட்டிக்காரர். முதல் நாள் முதல் பந்தை எவ்வளவு வேகமாக வீசுகிறாரோ அதே அளவு வேகத்துடன் இரண்டாவது நாளும் பந்தை வீசுவார். எந்த வகை கிரிக்கெட் பார்மேட் என்றாலும் சரி அவர் சிறப்பாக பந்து வீசுவார்.

- Advertisement -

அவரைப் பார்த்துதான் நான் பயந்து இருக்கிறேன் நான் விளையாடிய நேரத்தில் அவர் அவருடைய பீக் பார்மில் இருந்தார். அவருடைய வேகம் நாம் நினைத்ததை விட வேகமாக இருக்கும் எந்த நேரத்திலும் நம்முடைய விக்கெட்டை அவர் எடுத்து விடுவார். எனவே நான் சந்தித்த பந்துவீச்சாளர்கள் மத்தியில் நான் சிரமப்பட்ட அல்லது பயந்த பந்துவீச்சாளர் அவர்தான் என்று கூறியுள்ளார்.

வாசிம் அக்ரம் 356 ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகள் 104 டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்டுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.