“நான் அப்பவே சொன்னேன்.. இது வழக்கமான மேட்ச்தான்.. ஓவர் ஆட்டம் கூடாது!” – ரோகித் சர்மா தெளிவான பேச்சு!

0
1750
Rohit

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இந்திய அணி பாகிஸ்தான் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிமையாக வென்று, தன்னுடைய அரை இறுதிக்கான வாய்ப்பை மிகவும் பிரகாசப்படுத்தி இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக சதம் அடித்து வெளியேறினார். இதற்கு அடுத்து களத்தில் நின்று அரை சதம் அடித்து ஸ்ரேயாஸ் ஐயர் வெற்றியை உறுதி செய்தார்.

வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா ” இன்றும் பந்துவீச்சாளர்களே ஆட்டத்தை அமைத்தனர். இது 190 ரன்களுக்கான ஆடுகளம் கிடையாது. ஒரு கட்டத்தில் நாங்கள் 280 ரன்களை எதிர்பார்த்து இருந்தோம். யார் பந்தைப் பெற்றாலும் அவர்களுடைய வேலையை செய்வார்கள்.எங்களிடம் ஆறு பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள்.

ஒவ்வொரு நாளும் எல்லோருடைய நாளாகவும் இருக்காது. யாருக்கு நல்ல நாளாக அமைகிறதோ அவர் அன்று வேலையை முடிக்க வேண்டும். கேப்டனாக இந்த இடத்தில் என்னுடைய வேலை மிகவும் முக்கியம்.

- Advertisement -

ஒரு நாளில் யார் மிகச் சிறப்பாக வேலையை செய்கிறார்கள் இன்று கண்டுபிடித்து நான் அவர்களுடன் சென்று ஆட்டத்தை முடிக்க வேண்டும். உலகக் கோப்பைக்கு நுழையும் அனைத்து வீரர்களும் நிறைய ரன் எடுத்திருந்தார்கள். எனவே அவர்களுக்கான ரோல் என்னவென்று தெளிவாக இருந்தது.

என்ன செய்வது என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். உலகக் கோப்பைக்கு முன் என்ன இருந்தது என்பது குறித்து நாங்கள் பார்க்க விரும்பவில்லை. நாங்கள் என்ன விரும்புகிறோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் என வாய்ப்பு கிடைத்த அனைவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்த வெற்றிகளால் மிக உற்சாகமாகவும் இருக்கக் கூடாது. மிகவும் தாழ்வாகவும் இருக்கக் கூடாது.

ஒன்பது லீக் போட்டிகள் இருக்கின்றன அடுத்து அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி இருக்கிறது. எனவே நாம் சமநிலையில் நம்மை வைத்துக்கொண்டு தொடர்ந்து முன்னேறி போக வேண்டும்.

நான் முன்பே சொன்னேன் இது மற்றுமொரு வழக்கமான போட்டிதான். எங்களைப் பொறுத்தவரை பாகிஸ்தான் ஒரு எதிரணி நாங்கள் அந்த வகையில் மட்டுமே விளையாடினோம். இங்கு எந்த ஒரு எதிரணியும் யாரையும் வீழ்த்த முடியும். குறிப்பிட்ட நாளில் நாம் நன்றாக இருக்க வேண்டும். கடந்த காலமும் எதிர்காலமும் இங்கு முக்கியம் கிடையாது!” என்று கூறியிருக்கிறார்,