“நல்லா விளையாடுறதுக்காக.. இவங்களுக்கு நிறைய பணம் கொடுக்கிறேன்!” – இசான் கிசான் வெளியிட்ட ஆச்சரியமான தகவல்!

0
1838
Ishan

நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாமல் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி வரும் டி20 தொடரில், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மிகவும் சிறப்பான ஒரு முடிவை எடுத்து செயல்படுத்தி இருக்கிறது.

அது என்னவென்றால், பேட்டிங்கில் மூன்றாவது இடத்திற்கு பவர் ஹிட்டிங் விளையாடக்கூடிய ஒரு இடதுகை பேட்ஸ்மேனை கொண்டு வந்திருக்கிறது. அதாவது இஷான் கிஷானை கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

இந்த இடத்தில் ஏன் இப்படியான ஒரு இடதுகை பேட்ஸ்மேன் தேவை என்றால், பவர் பிளே முடிந்து பெரும்பாலும் டி20 அணிகளில் லெக் ஸ்பின் மற்றும் இடதுகை சுழற் பந்துவீச்சு இரண்டும் கொண்டுவரப்படுகிறது. இவர்களை தாக்கி விளையாடுவதற்கு அந்த இடத்தில் இப்படியான ஒரு இடதுகை பேட்ஸ்மேன் தேவைப்படுகிறார்.

சில காலமாக இந்தியடி20 அணியில் இஷான் கிஷான் துவக்க வீரராக அனுப்பப்பட்டு மிகவும் தடுமாற்றமான முறையிலே விளையாடி வந்தார். தற்பொழுது மூன்றாவது இடத்திற்கு வந்ததால் அவரது ஆட்டம் நன்றாகமாறி இருக்கிறது.

இதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் அந்த இடத்தில் இவர் அடித்து விளையாடுவதற்கு ஏதுவான சுழற் பந்துவீச்சு கிடைக்கிறது. மேலும் புதிய பந்து ஸ்விங் ஆகும் பொழுது, இவருக்கு தடுமாற்றங்கள் இருந்தது. தற்பொழுது இவர் ஓரளவுக்கு பந்து தேய்ந்து நான்கு ஓவர் கழித்து மேலே வருகிறார். இது இவருக்கு நன்றாக உதவி செய்கிறது.

- Advertisement -

இப்போது இருக்கும் இந்திய டி20 அணியை பார்த்தால் இந்திய நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் யாரும் தேவையில்லை என்பது போல் தோற்றம் அளிக்கிறது. ஹர்திக் பாண்டியா மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக உள்ளே வந்தால் மொத்தமாக இந்த அணி இன்னும் பலமானதாக மாறிவிடும்.

தற்பொழுது சிறப்பான ஆட்டத்தை டி20 கிரிக்கெட்டில் வெளிப்படுத்தும் இஷான் கிஷான் அதற்கான காரணத்தை கூறும்பொழுது “எனது பயிற்சியாளர் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட நிபுணருக்கு நிறைய பணம் செலவழிக்கிறேன். அவர்கள்தான் என்னை ஆட்டத்திற்கு வடிவமைத்து தயார்படுத்துகிறார்கள்.

நான் பந்தின் தன்மைக்கேற்ப ஷாட்களை விளையாடுகிறேன். பந்துவீச்சு நன்றாக இருந்தால் அதற்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். அதே சமயத்தில் பந்து அடிக்கும் இடத்தில் இருந்தால் நான் என்னுடைய ஷாட்டுக்கு நேராகச் செல்கிறேன்!” என்று கூறி இருக்கிறார்!