“பீல்டிங் பண்றப்பவே தெரிஞ்சிடுச்சு.. இந்த விஷயம் ரொம்ப வேதனையா இருக்கு!” – தென் ஆப்பிரிக்க கேப்டன் பேச்சு!

0
1920
Markram

இந்திய அணி தற்பொழுது 3 கேப்டன்களின் கீழ், 3 வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய இளம் அணி சந்தித்தது.

- Advertisement -

இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதன் காரணமாக புதிய கேப்டன் எய்டன் மார்க்ரம்முக்கு டி20 தொடரை வெல்லுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு அமைந்தது. இந்த நிலையில் இன்று தொடரின் மூன்றாவது போட்டியில் நடைபெற்றது.

- Advertisement -

மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக டாஸ் அவர்கள் பக்கமே சென்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய, இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 41 பந்தில் 60 ரன்கள் எடுத்தார்.

இன்னொரு பக்கம் சூரியகுமார் யாதவ் முதல் 25 பந்தில் 27 ரன்கள் எடுத்து, அதற்கு அடுத்த 31 பந்துகளில், அதிரடியாக 73 ரன்கள் குவித்து, இந்திய அணி 20 அவர்கள் முடிவில் 21 ரன்கள் எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணி ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் சுழல் பந்துவீச்சில் சிக்கி 95 ரன்களுக்கு சுருண்டு 106 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

தோல்விக்கு பின் பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் “உண்மையை சொல்வது என்றால், நாங்கள் ஃபீல்டிங் செய்த பொழுது ஆடுகளம் இருந்த விதத்திற்கு, 200 ரன்களை துரத்த வேண்டும் என்பதில் நான் மகிழ்ச்சி அடையவில்லை.

ஆடுகளத்தில் பந்துகள் கொஞ்சம் தாழ்வாக சென்றன. சில நேரங்களில் பந்து கொஞ்சம் என்றும் வந்தது. இதனால் 200 ரன்களை சேஸ்செய்வது என்பது கடினம்தான். அவர்கள் விளையாடிய பொழுது மைதானத்தில் எல்லா பக்கத்திலும் அடிக்க முடிந்தவர்களாக தெரிந்தார்கள்.

மேலும் நாங்கள் பேட்டிங் செய்ய வந்த பொழுது இந்த ரன்களை துரத்த முடியும் என்று நான் நம்பினேன். ஆனால் அப்படி செய்ய முடியாதது மகிழ்ச்சி அளிக்கவில்லை. மேலும் இந்த தொடரில் இருந்து சில நல்ல விஷயங்கள் கிடைத்திருக்கின்றன. அதேபோல் நாங்கள் சரி செய்ய வேண்டிய சில விஷயங்களும் தெரிந்திருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -