தோனி முன்னாடியே நான் இந்தியன் டீமுக்குள் நான் வந்தாலும், அவரு சொந்த உழைப்புல மேல வந்தவரு.. என்னோட இடம் போச்சேன்னு நான் வருத்தப்படவே இல்லை – தினேஷ் கார்த்திக் பேட்டி!

0
623

தோனிக்கு முன்னரே நான் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தாலும், அவர் என்னைவிட மேலே உயர்ந்துவிட்டார் என்பதில் எனக்கு வருத்தமே இல்லை. சொந்த உழைப்பில் உயர்ந்தவர் என்று பெருமிதமாக பேசியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2003 ஆம் ஆண்டு அறிமுகமான தினேஷ் கார்த்திக், அவ்வப்போது இந்திய அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்தார். 2004 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக்-க்கு பின்னர் இந்திய அணிக்குள் இடம் பிடித்த மகேந்திர சிங் தோனி, அபாரமாக செயல்பட்டு தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

- Advertisement -

தோனி, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்தை நிறப்பியதால், அணியில் சற்று சொதப்பலான பார்மில் இருந்த தினேஷ் கார்த்திக் தேவை இல்லாமல் போனது. அதன்பிறகு உள்ளூர் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் நன்றாக செயல்பட்டும் இந்திய அணிக்குள் இடம் கிடைக்க்காமலே இருந்தது.

இதற்கு தற்போது வரை பேச்சுக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதாவது தோனி வந்தபிறகு தான் தினேஷ் கார்த்திக்-இன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை நிரந்தரம் இல்லாமல் போனது. இல்லையெனில் அவரைப் போன்ற திறமையான பேட்ஸ்மேன் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றிருப்பார் என பேசப்பட்டு வந்தது.

சமீபத்தில் ஆர்சிபி அணி நிர்வாகம் நடத்தி வரும் ஆடியோ நேர்காணலில்(பாட்கேஸ்ட்) தினேஷ் கார்த்திக் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “ஆரம்ப காலத்தில் நானும் தோனியும் இந்தியா ஏ அணிக்கு விளையாடினோம். அவருக்கு முன்னரே எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் இந்தியா ஏ அணியில் மிகசிறந்த பார்மில் இருந்து வந்தார்.

- Advertisement -

விரைவில் அவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்தது. கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் மிகச்சரியாகப் பயன்படுத்தி மேலே உயர்ந்து கொண்டே இருந்தார். சொந்த உழைப்பினால் நம்பர் ஒன் வீரராக வளர்ந்தார். இத்தகைய பேருக்கும் புகழுக்கும் தகுதியானவர். அவர் வந்ததால் எனக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது என்று பேசுகிறார்கள். ஆனால் எனக்கு துளியும் வருத்தம் இல்லை. அவரைப்பார்த்து இப்பொழுதும் வியக்கிறேன்.” என்றார்.