“என் வாழ்நாள்ல இப்படி ஒரு ஆட்டத்தை நான் பார்த்ததே கிடையாது!” – மேக்ஸ்வெல்லுக்கு சச்சின் மனம் திறந்த பாராட்டு!

0
5539
Sachin

இன்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினின் சொந்த மைதானமான மும்பை வான்கடே மைதானத்தில், மேக்ஸ்வெல் ஒரு சூறாவளி இன்னிங்ஸ் விளையாடி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்!

ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் முதலில் பேட்டிங் செய்து குவித்து, பிறகு பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் ஏழு விக்கெட்டுகளை 91 ரன்களுக்கு பறித்து, மீதம் மூன்று விக்கெட்டுகளுக்கு 201 எடுக்க வேண்டிய நெருக்கடியான நிலைக்கு ஆஸ்திரேலியாவை தள்ளியது.

- Advertisement -

ஆனால் இவ்வளவு கடினமான நிலையில் இருந்து ஆஸ்திரேலியா அணியை கௌரவமான நிலைக்கு கொண்டு வந்தது மட்டுமல்லாமல், அந்த இடத்திலிருந்து ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெறவும் வைக்கும் விதமான ஒரு இன்னிங்ஸ் விளையாடி, 128 பந்துகளில் 201 ரன்கள் குவித்து மேக்ஸ்வெல் மிரட்டி இருக்கிறார்.

இதில் இன்னொரு ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் அவரால் ரன் எடுப்பதற்கு ஓடவே முடியாத அளவுக்கு தசைப்பிடிப்பு காலில் ஏற்பட்டிருந்தது. ஆனால் இப்படியான காயத்தை சுமந்து கொண்டே அவர் இவ்வளவு பெரிய ரன்னை தனி ஆளாக நின்று அடித்தது கிரிக்கெட்டில் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இலக்கைத் துரத்தும் பொழுது அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுதான். மேலும் துவக்க ஆட்டக்காரர் அல்லாத ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்னும் இதுதான். இந்த வகையில் இதுவரையில் மேக்ஸ்வெல் இந்த 201 ரன்கள் செய்ததாக பத்து சாதனைகள் வெளியில் வந்திருக்கிறது. கிரிக்கெட் புள்ளி விபரங்களை எடுத்தால் இந்த சாதனைப்பட்டியில் இன்னும் கொஞ்சம் நீளும்.

இந்த நிலையில் இன்றைய போட்டி குறித்து ட்விட் செய்துள்ள சச்சின் கூறும் பொழுது “ஆப்கானிஸ்தான் அணியை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர இப்ராஹிமின் சதம் சிறப்பானதாக இருந்தது. ஆப்கானிஸ்தான் இரண்டாவது பகுதியில் ஆரம்பித்து மொத்தமாக 70 ஓவர்கள் வரை சிறப்பாக இருந்தார்கள்.

ஆனால் கடைசி 25 ஓவர்களில் மேக்ஸ்வெல் விளையாடியது ஆப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த அதிர்ஷ்டத்தையும் மாற்றுவதற்கு போதுமான ஒரு ஆட்டமாக இருந்தது. இது அதிகபட்ச அழுத்தத்தில் அதிகபட்ச செயல்திறன் ஆகும். மேலும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பார்த்த மிகச்சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் இதுதான்!” என்று பெரிய அளவில் பாராட்டி இருக்கிறார்!

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி அரையிறுதி சுற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்வதும் உறுதியாகி இருக்கிறது,

- Advertisement -