“சூரியகுமார் அடிக்கிற இந்த ஷாட்ஸ் நான் என்னோட கேரியர்ல அடிச்சதே இல்லை” — ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி!

0
458

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களால் 360 டிகிரி பேட்ஸ்மேன் என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா அணியின் ஏபி டிவில்லியர்ஸ் டெஸ்ட் ஒரு நாள் மட்டும் டி20 கிரிக்கெட் போட்டி என அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக விளங்கியவர். ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய இவர் கடந்த ஆண்டு முதல் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். தற்போது கிரிக்கெட் விமர்சகராகவும் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார் .

மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ரண்களை எடுக்கக்கூடிய திறமை இவரிடம் இருந்ததாலேயே 360 டிகிரி பேட்ஸ்மேன் என அழைக்கப்பட்டார். கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் அபாயகரமான பேட்ஸ்மேன் என்பது இவரது சிறப்பம்சமாகும் . டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 150 முதல் இரநூறு ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் இவரால் டெஸ்ட் போட்டிகளில் அதற்கு நேர் எதிராக 20 முதல் 30 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஆட கூடியவர் .

- Advertisement -

இவர் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் குவித்த ரன்களே இதற்கு சாட்சி . தென்னாப்பிரிக்க அணிக்காக 1114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 8765 ரண்களை எடுத்து இருக்கிறார். இதில் 22 சதங்களும் ,46 அரை சதங்களும் அடங்கும். இவரது சராசரி 50.56. 228 ஒரு நாள் போட்டிகளில் ஆடி இருக்கும் டிவில்லியர்ஸ் 9577 ரண்களை குறித்துள்ளார். இதில் 25 சதங்களும் 53 அரை சதங்களும் அடங்கும். 75 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் பத்து அரை சதங்களுடன் 1672 ரன்களை எடுத்துள்ளார் . டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடி இருக்கும் டிவில்லியர்ஸ் 5162 ரன்களை குவித்து இருக்கிறார் இதில் மூன்று சதங்களும் 40 அரை சதங்களும் அடங்கும் .

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியின் டி20 நட்சத்திர வீரராக விளங்கி வருபவர் சூரியகுமார் யாதவ் . தற்போது கிரிக்கெட் ரசிகர்களால் இவர் தான் 360 டிகிரி வீரர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். தென்னாப்பிரிக்கா அணியின் ஏபி டிவில்லியர்ஸ் பலமுறை சூரியகுமார் யாதவின்பேட்டிங்கை பற்றி பாராட்டி பேசி இருக்கிறார் . சமீபத்திய பேட்டி ஒன்றிலும் அவர் சூரியகுமார் யாதவை வெகுவாக புகழ்ந்துள்ளார் .

இது பற்றி பேசி இருக்கும் டிவில்லியர்ஸ் ” சூரியகுமார் யாதவ் அடிக்கும் சில ஷர்ட்களை நான் என்னுடைய கேரியரில் அடித்ததே இல்லை என தெரிவித்திருக்கிறார். அவர் ஆடும் சில கிரிக்கெட் ஷாட்கள் மிக அற்புதமாக இருப்பதாகவும் பாராட்டினார். எனினும் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஏற்றவாறு சூரியகுமார் யாதவ் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் பற்றி தொடர்ந்து பேசிய டிவில்லியர்ஸ் ” தற்போது அவர் மிகவும் அற்புதமாக ஆடி வருகிறார். மைதானத்தின் அனைத்து பகுதிகளையும் அணுகக் கூடிய வகையில் இருக்கும் அவருடைய ஷாட்கள் அற்புதமாக இருக்கிறது . அவர் இன்னும் நிறைய காலம் கிரிக்கெட் விளையாடுவார் . இதுபோன்று சிறப்பான ஆட்டத்தை தொடர்வார் என்று கருதுகிறேன் . வருங்கால கிரிக்கெட்டில் நிச்சயமாக அவர் ஒரு ஆர் வீரராக வருவார்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” சூரியகுமார் யாதவ் அடிக்கக்கூடிய சில ஷாட்ஸ் நம்ப முடியாத வகையில் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது . அதுபோன்ற ஷாட்களை நான் என் கிரிக்கெட் கேரியரில் விளையாடியது இல்லை” என தெரிவித்திருக்கிறார். சூரியகுமார் யாதவ் டி20
போட்டிகளில் நட்சத்திர வீரராக இருந்தாலும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.