“நான் முழுசா விசாரிச்சிட்டேன்.. பாகிஸ்தான் ட்ரெஸ்ஸிங் ரூம்ல சதிதான் பண்றாங்க!” – அகமது சேஷாத் பகீர் குற்றச்சாட்டு!

0
1825
Pakistan

பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்து மற்றும் இலங்கை என இரண்டு சிறிய அணைகளை வென்று வந்தது.

இதற்கு அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் படுதோல்வி அடைந்தது. இதுவரை அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு என்பது இருக்கவே செய்தது.

- Advertisement -

இந்த நிலையில் சென்னையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது மட்டுமில்லாமல் படுதோல்வி அடைந்தது, உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் அணியை விமர்சிக்காமல் இருந்த ஒட்டுமொத்தத்தையும் வெளியே கொண்டு வந்துவிட்டது.

தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் பாகிஸ்தான் அணி நிர்வாகம் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் என அனைவரும் விமர்சன வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டு கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

மேலும் பாகிஸ்தான் அணிக்குள் நிலவி வரும் அரசியல் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு குறித்து பல முன்னாள் வீரர்கள் உண்மைகளை உடைத்து பேசி வருகிறார்கள். அதில் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் கூறப்படுகிறது.

- Advertisement -

தற்போது இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் அகமது சேஷாத் சில பகீர் தகவல்களை தற்பொழுது வெளியிட்டு பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது “நான் சில வீரர்களுடன் சில விஷயங்களை பேச தெரிந்து கொண்டேன். பாகிஸ்தானின் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரே மாதிரி எல்லா வீரர்களையும் வரவேற்பதும் சமமாக நடத்துவதும் கிடையாது என்பது தெரிந்திருக்கிறது. அணியில் சில வீரர்களை உள்ளே வைத்து சில வீரர்களை வீழ்த்துவதற்கு நினைக்கிறார்கள்.

பாகிஸ்தான் அணிக்குள் தயாப் தாகீர் கொண்டுவரப்பட்டார். ஆனால் பிறகு அவர் உடனே டிராப் செய்யப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட் அடிப்படையில் சவுத் ஷஹில் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

தற்பொழுது கொண்டுவரப்பட்டிருக்கும் உசாமா மிருக்கு உலகக்கோப்பைக்காக முன்கூட்டியே வாய்ப்பு கொடுங்கள் என்று நாங்கள் அப்போது இருந்து கூறி வந்தோம். அவர் நல்ல மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர். அவர் பழைய பந்தில் நன்றாக வீசுவார். ஆனால் அவருக்கு பதினோராவது ஓவரை கொடுக்கிறார்கள்.

பாகிஸ்தான் அணியில் தற்போது சில குறிப்பிட்ட வீரர்களை காப்பாற்றுவதற்காக, இந்த மாதிரியான வீரர்களை சிக்க வைத்து தந்திரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் மிஸ்டரி ஸ்பின்னர் அப்ரார் அகமதுவை கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் முன்பிருந்தே கூறி வந்தோம். இவர்கள் நாங்கள் கூறும் எங்களுடைய ஆட்கள். இந்த காரணத்தினாலேயே இவர்களுக்கு பாகிஸ்தான் அணிக்குள் எந்த வரவேற்பும் கிடையாது!” என்று கூறி இருக்கிறார்!