“தோனி விராட் பாய்கிட்ட இந்த விஷயம் தொடர்பா முன்னவே பேசி வச்சிருக்கேன்” – குர்பாஸ் நெகிழ்ச்சி பேச்சு

0
387
Gurbaz

இந்திய அணிக்கு எதிராக முதல் முறையாக, வெள்ளைப் பந்து தொடர் ஒன்றில் இரு நாடுகளுக்கு இடையே ஆப்கானிஸ்தான் அணி சமீபத்தில் விளையாடி முடித்திருக்கிறது.

நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்று போட்டிகளையும் ஆப்கானிஸ்தான் அணி தோற்று இருந்தாலும், அவர்களுக்கு இந்தத் தொடரில் இருந்து நிறைய கற்றல்கள் கிடைத்து இருக்கிறது.

- Advertisement -

மேலும் மூன்றாவது டி20 போட்டியில் வெற்றியை அவர்கள் மூன்று முறை தொட்டு இழந்தார்கள். கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானுக்கும் அந்த குறிப்பிட்ட போட்டி எந்த நாளும் மறக்காது.

இலங்கை அணியை விட ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து இந்திய ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அந்த அளவிற்கு சமீப காலத்தில் அந்த அணியின் வளர்ச்சி அமைந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணியின் குர்பாஸ் பேசிய பொழுது ” எனது கிரிக்கெட்டை எப்படி மேம்படுத்துவது என்று தோனி பாய் மற்றும் விராட் பாயிடம் நான் ஏற்கனவே பேசி வைத்திருக்கிறேன். என் மனதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நான் அதில் வேலை செய்ய வேண்டும். என்னுடைய கிரிக்கெட் பயணம் மற்றும் நான் அடுத்த கட்ட வளர்ச்சியை எப்படி அடைய வேண்டும் என்று விராட் பாயிடம் ஆலோசனைகள் கேட்டு இருக்கிறேன்.

- Advertisement -

விளையாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கும். நாங்கள் இந்தத் தொடரில் நிறைய ரசித்து விளையாடி கற்றுக் கொண்டோம். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற பெரிய வீரர்களுக்கு எதிராக விளையாடியது மிகுந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்தது. எதிர்காலத்தில் இந்தியாவிற்கு எதிராக நிறைய தொடர்கள் விளையாடுவோம் என்று நம்புகிறோம்.

நாங்கள் உலகக் கோப்பையில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். சில இடங்களை நாங்கள் மேம்படுத்த வேண்டும். அடுத்த உலகக் கோப்பையில் நாங்கள் ஏற்கனவே செய்த தவறுகளை செய்ய மாட்டோம் என்று நம்புகிறோம்.

உலகக் கோப்பை சமயத்தில் தீபாவளி நேரத்தில் டெல்லி குளிரில் இருந்த மக்களுக்கு போர்வைகளை கொடுத்தேன். நான் அவர்களை அதற்கு முன்பு குளிரில் பார்த்த பொழுது ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நான் இதை வெளிப்படுத்திக் கொள்ள நினைக்கவில்லை. யாரோ ஒருவர் அதை படம் எடுத்து சமூக வலைதளத்தில் கொண்டு வந்து விட்டார்.

நாம் எங்கிருந்து வந்தாலும் மனிதநேயத்தை மதிக்க வேண்டும். இந்தியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் ஒரே மாதிரியானவர்கள். எல்லா சூழ்நிலைகளிலும் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம். மேலும் இது போன்ற சூழ்நிலைகளில் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருவருக்கொருவர் உதவுவது எப்பொழுதும் நல்ல விஷயம்” என்று கூறி இருக்கிறார்.