30 பந்தில் உலக கோப்பையில் சதம் அடிக்க நினைக்கிறேன்.. ஆனால்.. – ஜோஸ் பட்லர் கருத்து!

0
2820
Butler

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன். 360 டிகிரியில் மைதானத்தைச் சுற்றி அவரால் எந்த பந்தையும் எங்கு வேண்டுமானாலும் அடிக்க முடியும். பந்துவீச்சாளர்கள் பந்து வீச வெறுத்த ஒரு பேட்ஸ்மேன் ஆகவே அவர் இருந்தார்!

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோகினஸ்பர்கில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டிவிலியர்ஸ் விளையாடியது கிரிக்கெட் கிடையாது அது ஒரு வதம். வெறும் 30 பந்துகளை மட்டுமே சந்தித்து, கோரி ஆண்டர்சன் 36 பந்துகளில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்திருந்த சாதனையை முறியடித்தார்.

- Advertisement -

டி20 கிரிக்கெட் என்று வரும் பொழுது இந்தச் சாதனைக்கு வாய்ப்புகள் இருப்பதைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இவ்வளவு வேகத்தை ஒரு பேட்ஸ்மேன் பேட்டிங்கில் வெளிக்கொண்டு வருவார் என்றால் அது நடக்காத காரியம்தான். மேலும் 30 பந்துகள் எனும் பொழுது மிக மிகக் கடினம்.

ஏபி டிவில்லியர்ஸ் நிகழ்த்தி காட்டி இருக்கும் இந்த ஒருநாள் கிரிக்கெட் அதிவேக சதத்தை முறியடிக்க முடியும் என்றால், பேட்டிங் வரிசையில் நடு வரிசையில் கீழ் வந்து விளையாடும் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் செய்ய முடியும். முன்னாள் களம் காணும் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்னை எடுத்துக் கொடுத்திருக்கும் பொழுது, இவர் இந்த சாதனையை உடைப்பதற்கான வேகத்தை பேட்டிங்கில் கொண்டு வரலாம்.

தற்பொழுது இது குறித்து ஜோஸ் பட்லரிடம் கேட்ட பொழுது ” ஆம் நான் இதற்கு நிச்சயமாக முயற்சி செய்கிறேன். ஆனால் இது மிகவும் சாத்தியமற்ற வேலை என்று நினைக்கிறேன். நான் ஒருநாள் கிரிக்கெட்டில் 46 பந்துகளில் வேகமான சதத்தை அடித்திருக்கிறேன். எனவே இதிலிருந்து நான் மேலும் 16 பந்துகள் குறைக்க வேண்டும். இது மிகவும் அதிகம் என்று நான் நினைக்கிறேன். இதனால் அவருடைய இந்த சாதனை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்றும் நினைக்கிறேன்.

- Advertisement -

நான் விளையாடிய ஆட்டங்களில் டி20 உலக கோப்பையில் சார்ஜாவில் இலங்கைக்கு எதிராக அடித்த சதம் முக்கியமானது. முதல் பாதையில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. இதே போல் ஐபிஎல் தொடரில் 2018 ஆம் ஆண்டு வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 94 ரன்கள் எடுத்தேன். அனேகமாக இதுவும் என்னுடைய சிறந்த ஆட்டமாக இருக்கும்.

2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியாவுக்கு எதிராக நான் விளையாடியதும் மிக முக்கியமான ஒரு போட்டி. 2022 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக அடித்த சதமும் மிகவும் முக்கியமான ஒன்றுதான்.

அன்றிச் நோர்கியா பந்துவீச்சில் 2020இல்
பின்புறத்தில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தது, பீல்ட் செட்டிங் பார்த்தபொழுதே தெரிந்தது. பைன் லெக் பீல்டர் உள்ளே இருந்தார். எனவே பந்து பின்புறத்தில் திரும்பி அடிப்பதற்கான அளவில் வீசப்படும் என்று உணர்ந்தேன். மேலும் அப்படி அடிப்பதற்கு பந்துவீச்சாளர் பந்தில் தரும் வேகமும் மிக முக்கியம். அதுவும் கிடைத்ததால் அது எளிதாக அமைந்தது!” என்று கூறி இருக்கிறார்!