“2007 டி20 வேர்ல்ட் கப்ல தோனிக்கு அந்த ஐடியாவை கொடுத்தது நான்தான்” – அப்ப அது தோனி கிடையாதா? – சேவாக் வெளியிட்ட சுவாரசிய தகவல்!

0
1810
Sehwag

இந்திய கிரிக்கெட்டில் 2007 ஆம் வருடம் மிகவும் மறக்க முடியாத ஒரு வருடம். 2007 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் முதல் சுற்றோடு இந்திய அணி வெளியேறியது. அதே வருடத்தில் அடுத்த நடந்த முதல் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது!

இந்த முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் பாகிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிவுடன் இடம் பெற்றது. டி20 உலக கோப்பை வரலாற்றில் இந்தத் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று மோதிய போட்டி எப்பொழுதும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ராவின் உத்தப்பாவின் அரைசதம் மற்றும் மகேந்திர சிங் தோனியின் 33 ரன்கள் உதவியுடன் 141 ரன்கள் சேர்த்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் மிஸ்பா உல் ஹக் அதிரடியாக அரை சதம் அடிக்க இறுதியில் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சமநிலையில் முடிந்தது.

இதற்கு அடுத்து வெற்றி யாருக்கு என்று தீர்மானிக்க நடத்தப்பட்ட பவுல் அவுட் முறையில் பங்குபெற்ற பாகிஸ்தானின் முதல் மூன்று வீரர்களும் ஸ்டெம்பை தவறவிட, இந்திய அணியின் முதல் மூன்று வீரர்களும் ஸ்டெம்பை குறி பார்த்து அடித்ததால் இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

தற்பொழுது இது குறித்து அப்போது அணியில் இடம் பெற்று இருந்த சேவாக் கூறும்போது “முதல் போட்டியே பவுல்ட் அவுட்டில் முடிந்தது. அப்பொழுது தோனியிடம் நான் முதலில் சென்று பவுல் அவுட் செய்கிறேன் என்று என்னால் அடிக்க முடியும் என்கின்ற நம்பிக்கையில் சொன்னேன்.

- Advertisement -

மேலும் இந்த வாய்ப்புகளை பந்துவீச்சாளர்களிடம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு அவர் ஏன் என்று கேட்டார். பந்துவீச்சாளர்கள் தங்களுடைய ரன் அப்பில் குழப்பம் அடைவார்கள் அதனால் வேண்டாம் என்றேன்.

நாங்கள் வார்ம் அப் செய்யும் பொழுது இதற்கான பயிற்சிகளைச் செய்தோம் அதனால் எங்களுக்குப் பழகிவிட்டது. மற்ற அணிகளுக்கு இது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை.

எங்களுடைய வார்ம் அப்பில் இந்த பயிற்சிகளை வெங்கடேஷ் பிரசாத்தும் ராபின் சிங்கும் கொண்டு வந்தார்கள். அப்போது யார் அதிகமாக ஸ்டெம்பை அடிப்பது என்று பார்க்கலாம் என்று போட்டி நடந்தது.

அந்தப் போட்டியில் பந்துவீச்சாளர்களை விட பேட்ஸ்மேன்களான நான் ரோகித் சர்மா, உத்தப்பா, ரெய்னா ஆகியோர்தான் ஸ்டெம்பை தவறாமல் குறிப்பாக அடித்தோம்!” என்று கூறியிருக்கிறார்.