“ஐபிஎல்-ல் ஒரு அணிக்காக விளையாட கனவு கண்டேன்.. அந்த அணிதான் எப்பவும் பிடிக்கும்!” – கேஎல்.ராகுல் ஓபன் ஸ்பீச்!

0
3267
Rahul

ஐபிஎல் தொடர்களில் வழக்கமாக தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதும், பின்பு இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது, சிறப்பான செயல்பாட்டின் தொடர்ச்சியை காட்டாமல் அணியை விட்டு வெளியேறுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தவர் கேஎல்.ராகுல்.

கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தனது துணை கேப்டன் பதவியையும் இழந்து, டெஸ்ட் அணியில் இருந்தும் கேஎல்.ராகுல் வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

இதற்கு முன்பாக 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் மீண்டும் துவக்க ஆட்டக்காரராக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதில் ஓரளவுக்கு கூட சிறப்பாக செயல்படாமல், இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து, இந்திய டி20 அணியில் இருந்து வாய்ப்பை இழந்தார்.

ஆனால் தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணிக்கு ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் மிகப்பெரிய தாக்கத்தை பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் உண்டாக்கி, இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கிறார். மேலும் இந்திய டி20 உலக கோப்பை அணியில் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக இடம் பிடிக்க, தற்பொழுது தொலைநோக்காக திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வருகிறார்.

கேஎல்.ராகுல் பெங்களூர் நகரத்தைச் சேர்ந்த, கர்நாடக மாநில அணிக்காக விளையாடிய வீரர். இவருக்கு 2016 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில், ஐபிஎல் தொடரில் தனது சொந்த மாநில அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 19 போட்டிகளில் விளையாடி 38 ரன் ஆவரேஜில், 145 ஸ்ட்ரைக் ரேட்டில், 417 ரன்கள் குவித்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக இவர் கடைசியாக விளையாடிய பொழுது, 14 போட்டிகளில் 397 ரன்கள் எடுத்தார். இவர் செயல்பாடு சிறப்பாக இருந்தும் கூட இவரை தக்க வைக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம் விரும்பவில்லை. அவர்கள் எடுத்த பல மோசமான முடிவுகளில் இந்த முடிவு மிக முக்கியமானது.

இதற்குப் பிறகு அவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு திரும்பி கேப்டனாக செயல்பட்டு, தற்பொழுது புதிய அணியான லக்னோ ஜெயின்ட்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் தனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான அணி எது என்பது குறித்து கேஎல்.ராகுல் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஆர்சிபி அணி எனது சிறுவயதில் திறமையை வெளிப்படுத்த எனக்கு நல்ல வாய்ப்புகளை கொடுத்தது. நான் பெங்களூரை சேர்ந்தவன் எனவே ஐபிஎல் தொடர் தொடங்கும் பொழுது நான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட கனவு கண்டேன். சில வருடங்கள் அவர்களுக்காக விளையாடியது எனது அதிர்ஷ்டம். அந்த அணி என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது!” என்று கூறி இருக்கிறார்!