“எனக்கு இவர் வேண்டாம்.. அந்த இடத்துக்கு இவர கொண்டு வாங்க அதுதான் சரியா இருக்கும்!” – அனில் கும்ப்ளே வெளிப்படையான பேச்சு!

0
3252
Ashwin

இந்திய அணி இன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது!

ஆப்கானிஸ்தான அணி தனது முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியுடன் தோல்வி அடைந்திருக்கிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்று நல்ல நிலையில் இருக்கிறது.

- Advertisement -

டெல்லி மைதானத்தை பொருத்தவரை பவுண்டரி எல்லைகள் மிகவும் சிறியது, மேலும் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ள சூழலை தெரிகிறது. இலங்கை தென் ஆப்பிரிக்கா மோதிக்கொண்ட போட்டி ஹைகோரிங் போட்டியாக அமைந்தது.

டெல்லி சிறிய மைதானம் என்கின்ற காரணத்தினால் முன்பு பந்து கொஞ்சம் திரும்பி மேலும் பந்து மெதுவாகவும் வரும். இதன் காரணமாக அடித்து ஆடுவது அவ்வளவு சுலபமாக இருக்காது. இதன் மூலம் மைதானம் சிறியதாக இருப்பதை சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் தற்பொழுது ஆடுகளம் பேட்டிங் செய்ய மிக சாதகமாக இருப்பது, பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியான ஒன்று.

இதன் காரணமாக சுழற் பந்துவீச்சாளர்களை பவுலிங் யூனிட்டில் வைப்பதை விட வேகப்பந்துவீச்சாளர்களை பவுலிங் யூனிட்டில் வைப்பதே சரியாக இருக்கும் என்கின்ற கருத்து அணிகளிடம் இருக்கிறது. சிறிய மைதானத்தில், பந்து கொஞ்சம் கூட திரும்பாத ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சாளர்களை எளிதாக கிளியர் செய்து விட முடியும்.

- Advertisement -

இதன் காரணமாக இன்றைய இந்திய அணியில் மூன்று ஸ்பின்னர்களை வைத்து விளையாடாமல், ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்திற்கு வேகப் பந்துவீச்சாளரை கொண்டு வர வேண்டும் என்பது பலருடைய கருத்தாகவும் இருந்து வருகிறது. ஆனால் அந்த இடம் யாருக்கு என்பதுதான் கேள்வி.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் லெஜன்ட் அனில் கும்ப்ளே கூறும் பொழுது ” இந்தியா எட்டாவது இடத்தில் சர்துல் தாக்கூரை பயன்படுத்தி வந்தது எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் ஆப்கானிஸ்தான் உடன் விளையாடுகிறீர்கள் எனும் பொழுது, அவர்களுடைய துவக்க ஆட்டக்காரர் குர்பாஸ் நல்ல பேட்டிங் ஃபார்மில் அதிரடியாக விளையாடக் கூடியவராக இருக்கிறார்.

அதனால் அவர் கொண்டு வரும் தரம் மற்றும் திறமையின் அடிப்படையில், முகமது சமியை விளையாடுவதில் நான் விருப்பம் தெரிவிக்கிறேன். மூன்று உலக தரமான வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டு ஆரம்பத்திலேயே குர்பாஸ் விக்கெட்டை பெறுவதில் நான் குறியாக இருப்பேன்!” என்று கூறியிருக்கிறார்!