“நான் கோலிய ஒன்னும் சொல்றதில்லை.. ஆனா அவர் என்னை விடாம ஸ்லெட்ஜிங் பண்றார்!” – முஸ்பிக்யூர் ரஹீம் பேட்டி!

0
2069
Virat

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது நான்காவது போட்டியில் நாளை பங்களாதேஷ் அணியை மகாராஷ்டிரா புனே மைதானத்தில் சந்தித்து விளையாடுகிறது!

இந்திய அணியின் கடைசி பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்திருந்தது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது.

- Advertisement -

சமீபத்திய இரு அணிகளின் மோதல்களை எடுத்துப் பார்த்தால் பங்களாதேஷ் அணியே பாசிட்டிவாக இருக்கிறது. மேலும் உலகக் கோப்பையில் இந்திய அணியை முதல் சுற்றில் வெளியேற்றிய வரலாறும் பங்களாதேஷ் அணிக்கு இருக்கிறது.

- Advertisement -

சமீபத்தில் இந்திய அணி தனது முன்னணி வீரர்களோடு சேர்ந்து விளையாடும் பொழுது மிகவும் வலிமையான ஒரு அணியாக செயல்பாட்டில் இருக்கிறது. இந்திய அணியை வீழ்த்துவது என்பது மிகக்கடினம். ஆனால் கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே இந்திய அணி இந்தப் போட்டியை அலட்சியமாக அணுகாது.

நாளை இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளை வெல்லும். மேலும் புள்ளி பட்டியலில் தன்னுடைய முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும். மேலும் அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை மிகவும் பிரகாசமாக்கிக் கொள்ளும்.

இந்த நிலையில் நாளை போட்டிக்கும் முன்பாக பங்களாதேஷ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் மூத்த வீரர் முஸ்பிகியூர் ரஹீம் பேசும் பொழுது விராட் கோலி குறித்து சில சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“உலகில் உள்ள சில பேட்டர்கள் தங்களை மற்றவர்கள் ஸ்லெட்ஜிங் செய்வதை விரும்புகிறார்கள். அதில் விராட் கோலியும் ஒருவர். இதனால் அவர் பம்ப் ஆகிறார். எனவே நான் அவரை ஸ்லெட்ஜ் செய்வதில்லை. மேலும் எனது அணியின் பந்துவீச்சாளர்களிடம் முடிந்த வரை அவரை சீக்கிரத்தில் வெளியேற்ற வேண்டும் என்று சொல்லுவேன்.

அதே சமயத்தில் நான் அவருக்கு எதிராக விளையாடும் எல்லா நேரத்திலும், நான் பேட்டிங் செய்ய செல்லும் பொழுது அவர் என்னை ஸ்லெட்ஜிங் செய்வார். ஏனென்றால் அவர் ஒரு போட்டியாளர் மற்றும் எப்பொழுதும் தோல்வி அடைய விரும்புவதில்லை. அவருடனான போட்டியை நான் எப்பொழுதும் விரும்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -