“அணியின் சூழ்நிலை பற்றிய கவலை எல்லாம் இல்லை என் ஏரியாவில் பால் வந்தால் மைதானத்திற்கு வெளியே அடிப்பது உறுதி” – நிக்கோலஸ் பூரன்!

0
294

16வது ஐபிஎல் தொடரின் 15 வது போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னா அணிகள் மோதின . இந்தப் போட்டி பெங்களூர் நகரின் சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. டாஸ் வென்ற கேஎல் ராகுல் பெங்களூர் அணியை முதலில் ஆட கேட்டுக்கொண்டார் .

துவக்கத்திலிருந்து அதிரடியாக ஆடிய ஆர்சிபி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 213 நாட்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. கேப்டன் பாப் டூப்ளசி 76 ரண்களும் விராட் கோலி 61 ரண்களும் மேக்ஸ்வெல் 51 ரண்களும் எடுத்தனர் .

- Advertisement -

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் அந்த அணியின் மார்க்க ஸ்டாய்னிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் அபார் ஆட்டத்தால் பரபரப்பான இறுதி ஓவரில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது .

19 பந்துகளில் 62 ரன்களை எடுத்து லக்னோ அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் ஆற்று நாயகனாக அறிவிக்கப்பட்டார் . இவர் ஏழு சிக்ஸர்கள் மற்றும் நான்கு பௌண்டரிகளின் உதவியுடன் 62 நாட்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கு பின் பேசிய பூரண ” தவறான நேரத்தில் ஆட்டம் இழப்பதை சரி செய்து கொள்ள விரும்புகிறேன். ஆட்டத்தின் இறுதி வரை நின்று அணை வெற்றி பெறுவதை உறுதி செய்வதே எனது இலக்கு . இன்று இரவு கொஞ்சம் சோர்வாக உணர்ந்தேன். அதனால் தவறான ஷர்ட் ஆடிவிட்டேன். எங்கள் அணி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி” என்று கூறினார்

- Advertisement -

இது பற்றிய மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஆட்டம் மற்றும் அணியின் சூழ்நிலைகளை பற்றி அதிகம் யோசிக்கவில்லை என்னுடைய ஏரியாவில் பந்து வீசினால் அந்தப் பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் ஆடினேன் .லெக் ஸ்பின்னர்கள் எதிராக என்னுடைய வாய்ப்பை பயன்படுத்தி ஆடினேன். அது எனக்கு நன்றாக அமைந்தது. எனது இன்னிங்ஸில் அதுதான் நான் முதலில் எடுத்த ரிஸ்க் அதற்குப் பிறகு வந்ததெல்லாம் அதுவாகவே அமைந்தது” என்று கூறினார்

தொடர்ந்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அவர் ” எங்கள் அணியின் சிறந்த அம்சம் என்னவென்றால் எங்களால் வேகப்பந்து வீச்சாளர்களையும் அடிக்க முடியும் சுழற் பந்துவீச்சாளர்களையும் அடிக்க முடியும் . t20 கிரிக்கெட்டில் எப்பொழுதுமே ஆதிக்க போக்கை கடைபிடிக்க வேண்டும். எதிரணியினர் 200 அல்லது 240 ரன்கள் அடித்தாலும் அதனை திருப்பி அடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் எதிர் அணியினர் மீது செலுத்தும் ஆதிக்கமும் வெற்றியைக் கொடுக்கும்” என்று கூறினார்