“நான் 2மாசமா மட்டும் உழைக்கல.. ஒரு விஷயத்துக்கு பெருமையா இருக்கு!” – ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன் பேச்சு!

0
1008
Samson

இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் சஞ்சு சாம்சன், இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டிசைடர் மேட்ச்சில் அசத்தலாக சதம் அடித்து தன்னை நிரூபித்திருக்கிறார்.

இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இரண்டு அணிகளும் ஒரு போட்டியை வென்று இருந்த காரணத்தினால், இன்றைய போட்டி இறுதிப் போட்டியாக மாறியது.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் தோற்று பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் கே எல் ராகுல் விக்கெட் உடன் சேர்த்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் சீக்கிரம் விழுந்து விட்டது. ஆடுகளம் பேட்டிங் செய்ய மெதுவாக கடினமாக இருந்தது.

இப்படியான நெருக்கடி நிலையில் திலக் வர்மாவை வைத்துக்கொண்டு சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 114 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 108 ரன்கள் எடுத்து, இந்திய அணி 296 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார்.

இதற்கு அடுத்து இந்திய பந்துவீச்சில் அர்ஸ்தீப், வாஷிங்டன் சுந்தர், ஆவேஸ் கான் ஆகியோர் சிறப்பாக செயல்பட, 46 ஓவர்களில் 218 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்காவை சுருட்டி இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற சஞ்சு சாம்சன் பேசும்பொழுது “இதில் குறிப்பாக எங்களுக்கு கிடைத்த முடிவு குறித்து நான் பெருமைப்படுகிறேன். கடந்த இரண்டு மாதங்களாக மட்டுமில்லாமல் நான் தொடர்ச்சியாக கடுமையாக உழைத்து வருகிறேன். அதனால் எல்லாமே நன்றாக இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஆடுகளம் மற்றும் பந்துவீச்சாளரின் மனநிலையை புரிந்து கொள்ள நேரம் கிடைக்கிறது. மேலும் டாப் ஆர்டரில் விளையாடும் பொழுது 10, 20 பந்துகள் நிலைநிறுத்திக்கொள்ள கூடுதலாக கிடைக்கிறது.

திலக் வர்மா எந்த அளவிற்கு முன்னேறி வந்திருக்கிறார் என்பது குறித்து மொத்த நாடுமே பெருமைப்படுகிறது. அவரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் சீனியர் வீரர்கள் இந்திய கிரிக்கெட்டின் தரம் எப்படி ஆனது என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஜூனியர்கள் வந்து வேலை செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. இடையில் பயணம் செய்து, இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு போட்டியில் விளையாடுவது என்பது கடினமானது. ஆனால் அதை எங்கள் வீரர்கள் செய்திருக்கிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்!