நான் ஹர்திக் பாண்டியா மும்பை போறத தடுக்கல.. ஏன்னா காரணம் இதான் – ஆசிஸ் நெக்ரா பேட்டி

0
284
Nehra

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா கழட்டி விடப்பட்டார். அந்த நேரத்தில் காயத்தில் இருந்த அவரை வெளியே அனுப்பிவிட்டு, நல்ல பேட்டிங் ஃபார்மில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜூனியர் ஆன சூரியகுமார் யாதவை அந்த அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டது.

அந்த நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியா விஷயத்தில் எடுத்த முடிவு பற்றி சில விமர்சனங்கள் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடமும் இருக்க செய்தது. இதற்கு அடுத்து அப்பொழுது ஐபிஎல் தொடர்பு புதிதாக வந்த இரண்டு அணிகளில் ஒன்றான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 15 கோடி ரூபாய்க்கு நேரடியாக வாங்கப்பட்டதோடு, கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

இதுகுறித்து பின் நாட்களில் ஹர்திக் பாண்டியா பேசியிருந்தபொழுது, கேஎல்.ராகுல் லக்னோ அணிக்கு செல்லவிருக்கின்ற காரணத்தினால், அவருக்கும் தனக்கும் நல்ல பிணைப்பு இருப்பதால், அந்த அணிக்கு சென்று விடலாம் என்பதாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும், ஆனால் ஆசிஸ் நெக்ராதான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தன்னை கேப்டனாக ஆக்குவதாக கூறி கூட்டி வந்ததாகவும், ஆரம்பத்தில் அதை தானே நம்பவில்லை என்பதாகவும் பேசி இருந்தா.

இப்படி ஆசிஸ் நெக்ரா மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வந்த அவர் முதல் சீசனில் கோப்பையை வென்று, இரண்டாவது சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்து, மிகவும் சிறந்த ஐபிஎல் சீசன்களை கேப்டனாக தனிப்பட்ட முறையில் வைத்திருந்தார். அவருக்கென்று ஒரு அணி உருவாகி, அவரைச் சுற்றி எல்லாம் இயங்கிக் கொண்டிருந்த பொழுது, திடீரென மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ட்ரேடிங் முறையில் செல்ல ஒப்புக்கொண்டு அதிர்ச்சி அளித்தார்.

ஹர்திக் பாண்டியாவின் அந்த இரண்டு ஆண்டு கால வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு ஆசிஸ் நெக்ராவுக்கு உண்டு. மிகவும் கடினமான காலத்தில் இருந்த பொழுது நம்பி வந்து அழைத்து கேப்டன் பதவியையும் பெற்று தந்து, பயிற்சியாளராக உடன் இருந்து கோப்பையையும் வென்று இருந்த நிலையில், அவரை விட்டு ஹர்திக் பாண்டியா பிரிந்து சென்றது நிறைய விமர்சனங்களை உருவாக்கி இருந்தது. தற்பொழுது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆசிஸ் நெக்ரா கூறும்பொழுது “ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருக்க வைப்பதற்கு ஒருபோதும் நான் எந்த வித முயற்சிகளும் செய்யவில்லை. விளையாட்டு தொடர்ந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது. கால்பந்து கிளப் சந்தையில் வீரர்கள் நிறைய மாறுவதைப்போல, நாம் இங்கும் எதிர்காலத்தில் பார்க்க போகிறோம்.

இதையும் படிங்க : 2024 ஐபிஎல் தொடரின் பாதி போட்டிகள் துபாய்க்கு செல்கிறதா? – ஐபிஎல் சேர்மன் பதில்

சுப்மன் கில் கேப்டனாக எப்படி செயல்பட இருக்கிறார் என்று பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை பார்க்க இந்தியாவில் பல ஆவலாக இருப்பார்கள். அதே சமயத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது சமி போன்ற வீரர்களுக்கான மாற்றைக் கொண்டு வருவது அவ்வளவு எளிதானது இல்லை” என்று கூறியிருக்கிறார்.