“பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட மக்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன்!” – இப்ராகிம் ஜட்ரன் அதிரடியான பேச்சு!

0
1804
Ibrahim

நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி மீண்டும் ஆச்சரியத்தை அளித்தது ஆப்கானிஸ்தான்!

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சதாப் கான் மற்றும் இப்திகார் அகமது கடைசி நேரத்தில் அதிரடி காட்ட இந்த ரன்கள் வந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்த வலிமையான அடித்தளமே வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

இரண்டாவது விக்கெட்டாக ஆட்டம் இழந்த துவக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜட்ரன் 87 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். மேலும் நேற்றைய போட்டியில் இவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே அரசியல் பிரச்சனைகள் சில உள்ளது போல பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கும் சில அரசியல் பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்த காரணத்தால் நேற்றைய போட்டி இரு நாடுகளுக்கும் முக்கியமானதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற இப்ராகிம் ஜட்ரன் பேசும் பொழுது “முதலில் நான் இப்படியான பெரிய போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்கு சர்வ வல்லமை உள்ளவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் என் அணிக்காக அதிக நேரம் நின்று ரன்கள் எடுக்க விரும்பினேன்.எனக்காகவும் என் நாட்டிற்காகவும் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பலமுறை நானும் குர்பாசும் பெரிய பார்ட்னர்ஷிப்புகளை அமைத்திருக்கிறோம். எங்களுக்கு இடையே நல்ல புரிதல் இருக்கிறது. நாங்கள் 16 வயதிற்கு உட்பட்ட அணியில் இருந்து ஒன்றாக விளையாடி வருகிறோம். அவர் நல்ல முறையில் ஊக்கம் அளிக்க கூடியவர்.

இந்த ஆட்டநாயகன் விருதை பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட மக்களுக்கு நான் அர்ப்பணிக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -