எனக்கு வந்த இந்திய கேப்டன் பதவியை தோனிக்கு தர காரணம் இதுதான் – சச்சின் டெண்டுல்கர் பேட்டி

0
3504

இந்திய கிரிக்கெட்டின் பிதாமகனாக திகழ்ந்தவர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக செய்த சாதனைகள் அளவிட முடியாதது. இந்திய கிரிக்கெட்டின் மணிமகுடத்தில் ஒரு ராஜாவாக உயர்ந்து நிற்கிறார் என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான்.

இப்படி ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், சதங்களில் சதம் அடித்ததது என்று இவர் படைத்த சாதனைகள் எண்ணில் அடங்காதது. அப்படி ஒரு மகத்தான கிரிக்கெட்டருக்கு கேப்டன்சி ஏதோ ஒத்துவரவில்லை. கேப்டன் பதவியில் நீடித்தால் தன்னால் பேட்ங்கில் கவனத்தை செலுத்த முடியாது என்று பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

- Advertisement -

2007ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு அப்போது புதிதாக உள்ளே நுழைந்த மகேந்திர சிங் தோனியை 2007இல் நடைபெற்ற டி20 உலக கோப்பை கேப்டனாக நியமித்து ஒரு புது அணியை அவரிடம் கொடுத்தது. சோதனை முயற்சியாகவே இந்திய அணி நிர்வாகம் இதனை பரிசோதனை செய்த நிலையில், இந்தியாவே எதிர்பாராத விதமாக டி20 உலகக் கோப்பை வென்று கொடுத்து மகத்தான சாதனையை படைத்திருந்தார் மகேந்திர சிங் தோனி.

அன்று எவரும் அறிந்திருக்கவில்லை இந்தியாவே தனது கேப்டன்சியால் ஆளப்போகிறார் என்று. அதன் பிறகு இவர் செய்த சாதனைகள் ஏராளம். டி20 உலக கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஐந்து முறை ஐபிஎல் பட்டங்கள், ஆசிய கோப்பை என்று இவரது சாதனைகளில் இடம்பெறாத கோப்பைகளே இருக்க முடியாது. இவரை முதன்முதலில் 2008ஆம் ஆண்டு கேப்டனாக நியமிக்க சச்சின் டெண்டுல்கரின் பங்கு முக்கிய அங்கம் வகிப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற பேட்டியில் ஜியோ சினிமாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர், முதலில் இந்திய அணியை வழிநடத்த தன்னை அணுகியதாகவும், பிறகு தோனியின் பெயரை அவர் பரிந்துரைத்ததாகவும் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது “உண்மையில் 2007ஆம் ஆண்டு பிசிசிஐயின் தலைவரான சரத் பவர் இந்திய அணியை வழிநடத்துமாறு என்னிடம் கேட்டார். அப்போது எனது உடல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று அப்போதைய சூழ்நிலையினை விளக்கி, இது இந்திய அணிக்கும் நல்லதல்ல என்று கூறினேன். தோனியை பற்றிய என்னுடைய புரிந்துணர்வு மிகவும் நன்றாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க:சேப்பாக்கில் இதுதான் உங்க கடைசி போட்டியா?.. தினேஷ் கார்த்திக் தந்த பதில்.. கலக்கத்தில் தமிழக ரசிகர்கள்

ஏனென்றால் அவரோடு நான் ஸ்லிப்பில் நின்று பலமுறை பீல்டிங் செய்யும் போது உரையாடி இருக்கிறேன். அவருடைய பதில்கள் அனைத்தும் சமநிலையிலேயே இருக்கும். அவர் மிகவும் அமைதியானவர் மற்றும் அவரது மன உறுதி மிகவும் வலிமையானது. அவர் உள்ளுணர்வின்படி மிகவும் சரியான முடிவுகளை எடுக்க கூடியவர். எனவே இதுவே நான் பிசிசிஐ இடம் அவரது பெயரை பரிந்துரைத்து அவரிடம் நான் தலைமை பண்புகளைக் காண்கிறேன்” என்று கூற வழி வகுத்தது. சச்சினின் இந்த கருத்துப்படி பிறகு கேப்டன் ஆக்கப்பட்ட தோனி அதன் பிறகு செய்த சாதனைகள் எல்லாம் அனைவரும் அறிந்ததே.