19.5வது பந்தில் தினேஷ் கார்த்திக் அவுட் ஆகிட்டு போனப்போ நான் அவருக்கு சாபம் விட்டேன் – அஸ்வின் பேட்டி!

0
12837

19.5 வது ஓவரில் தினேஷ் கார்த்திக் அவுட் ஆகி வெளியே நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது அவரை பார்த்து நான் சாபம் விட்டேன் என்று தனது யூடியூப் சேனலில் பதிவிட்ட வீடியோவில் பேசியிருக்கிறார் ரவி அஸ்வின்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி அபாரமாக விளையாடியது. கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டம் இந்திய அணி பக்கம் கடைசி பந்தில் தான் திரும்பியது. இறுதியாக நான்கு விக்கெடுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தியாவின் வெற்றிக்கு முழு முக்கிய காரணம் மிடில் ஓவர்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவரும் அமைத்த பாட்னர்ஷிப் தான். கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற 31 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

19 வது ஓவரில் விராட் கோலி 2 சிக்ஸர்கள் உட்பட 15 ரன்கள் அடித்து மீண்டும் நம்பிக்கையை இந்திய அணியின் பக்கம் திருப்பினார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என இருந்தபோது, முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா அவுட் ஆனார். அடுத்த பந்தில் விராட் கோலி சிக்சர் அடிக்க, அந்த பந்து நோபால் ஆனதால் இந்தியாவிற்கு இன்னும் நம்பிக்கை பிறந்தது.

ப்ரீ-ஹிட் பந்தில் மூன்று ரன்கள் ஓடி எடுத்தனர். பின்னர் கடைசி இரண்டு பந்துகளில் இந்திய அணி வெற்றி பெற இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தார். அவர் அழகாக ஃபினிஷ் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐந்தாவது பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

கடைசியாக உள்ளே வந்த அஸ்வின் ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. முதல் பந்தை எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் ஒயிடு வாங்கினார். அடுத்த பந்தில் தூக்கி அடித்து ஒரு ரன்கள் எடுத்து கொடுக்க வேண்டிய வெற்றி பெற்றது.

தினேஷ் கார்த்திக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பும் பொழுது, எதிரே வந்த அஸ்வின் அவரை பார்த்து ஏதோ ஒன்று கூறினார். அது என்ன? என்று தெரிந்து கொள்ள பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம் இதற்கு பதில் அளித்திருக்கிறார்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் அவர் கூறுகையில், “தினேஷ் கார்த்திக் அதை முடித்து விடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவுட்டாகி வெளியே செல்லும் பொழுது ‘படுபாவி’ என்று அவரை பார்த்து கூறினேன். கிட்டத்தட்ட சாபம் விட்டேன் என்றே கூறலாம். ஆனால் இன்னும் நேரம் இருக்கிறது, என்னால் இதை செய்ய முடியும் என்று நம்பினேன்.

அதற்கு ஏற்றார் போல, கடைசி பந்தை மிட்-ஆஃப் திசையில் தூக்கி அடித்து வெற்றி பெறுவதற்கு உதவ முடிந்தது.” என்று கூறினார்.

மேலும் விராட் கோலி பற்றி பேசிய அவர், ” விராட் கோலியின் உடம்பிற்குள் ஏதோ ஆவி புகுந்து விட்டது என்று நினைக்கிறேன். 45 பந்துகள் வரை விராட் கோலி அமைதியாக இருந்தார். அதன் பின்னர் கங்காவாக இருந்த அவர் சந்திரமுகியாக மாறி ருத்ரதாண்டவம் ஆடினார்.” என்று புகழ்ந்தார்.