நான் பேட்டிங் பண்ணிட்டு போயிட முடியாது.. யாரையும் விட 3 மடங்கு வேலை இருக்கு! – கொட்டிய ஹர்திக் பாண்டியா!

0
588
Hardik

உலக கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சு என இரண்டையும் செய்யக்கூடிய ஆல் கவுண்டர் ஒரு அணிக்கு கிடைப்பது என்பது மிகப்பெரிய பொக்கிஷம் கிடைத்ததற்கு சமம்!

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்பவர் 10 ஓவர் வீசுவார், பேட்டிங்கில் அதிரடியாக 30 ரன் எடுப்பார் என்றால், அணியில் அவரது மதிப்பு தங்கத்திற்கு ஈடாக இருக்கும். ஏனென்றால் ஒரு வேகப்பந்துவீச்சாளர் பேட்டிங்கிலும் கவனம் செலுத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

- Advertisement -

அதே சமயத்தில் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அதிரடியாக மட்டும் இல்லாமல், அணி நெருக்கடியான சமயத்தில் இருக்கும் பொழுது மிகவும் புத்திசாலித்தனமான, முழுமையான பேட்ஸ்மேன் ஆகவும் செயல்படுவார் என்றால் அணியில் அவரது மதிப்பு வைரத்தை விட அதிகம்.

இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா அப்படிப்பட்ட வைரம் போன்றவர்தான். அவரால் வேகப்பந்து வீச்சில் 10 ஓவர்கள் வீசி, விக்கட்டுகளையும் கைப்பற்ற முடியும். அதே சமயத்தில் அணி நெருக்கடியான நேரத்தில் இருந்தால் 30 ஓவர்களுக்கு மேல் களத்தில் நின்று, அணியை பேட்டிங்கில் மீட்டுக் கொண்டு வரவும் முடியும்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா இதைத்தான் பேட்டிங்கில் செய்து காட்டினார். அதே சமயத்தில் பாகிஸ்தான் அணிக்கும் இந்தியாவுக்குமான ஒரே வித்தியாசமாக இருப்பது ஹர்திக் பாண்டியா மட்டுமே. இந்தியாவில் இப்படியான ஒருவர் இருக்கிறார். பாகிஸ்தானில் அப்படியான ஒருவர் கிடையாது.

- Advertisement -

இந்த நிலையில் தனது பொறுப்பு குறித்து பேசி உள்ள இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா
“ஒரு ஆல் ரவுண்டராக என்னுடைய பணிச்சுமை என்பது மற்ற யாரையும் விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம். அணியில் உள்ள ஒரு பேட்டர் பேட்டிங் செய்து விட்டு வீட்டிற்கு கிளம்பும்பொழுது, நான் அப்பொழுதும் பந்துவீசி கொண்டிருக்க வேண்டும்.

விளையாட்டு என்று வரும் பொழுது அணிக்கு என்ன தேவையோ? அதைச் செய்தே ஆக வேண்டும். அதே சமயத்தில் களத்திற்கு வெளியே அணி நிர்வாகம் நான் என்ன செய்ய வேண்டும்? என்பதில் முடிவு செய்கிறார்கள்.

ஏனென்றால், நான் பத்து ஓவர்கள் வீசத் தேவையில்லை என பொழுது, நான் பத்து ஓவர்கள் வீசுவதில் எந்த அர்த்தமும் கிடையாது. ஆனால் 10 ஓவர்கள் அணிக்கு நான் பந்து வீச வேண்டும் என்றால், நிச்சயம் நான் வீசுவேன். நான் எப்பொழுதும் வெற்றி பெற எனக்கு ஒரு வாய்ப்பை தருகிறேன். அதாவது ஆட்டத்தை புரிந்து கொள்வது மற்றும் என்னை நானே நம்புவதின் மூலம் அதைச் செய்கிறேன்.

என்ன நடந்தாலும் நீங்கள் உங்களை நம்ப வேண்டும் ஆதரிக்க வேண்டும். நீங்கள் தான் உலகில் சிறந்தவர் என்று உங்களை நம்ப வேண்டும் என்று நான் உணர்ந்தேன். இது உங்களுக்கான வெற்றியை அப்படியே தந்து விடாது. ஆனால் வெற்றியையும் தரும். வெற்றியை நோக்கி செயல்பட உங்களை உந்துகிறது. எனவே பிராக்டிக்கலாக உங்களை நீங்கள் நம்புங்கள் ஆதரியுங்கள்!” என்று கூறி இருக்கிறார்!