“ஜடேஜா இல்லனா நான் கிடையாதா?.. எனக்கு பொறாமையா?” – அஷ்வின் தடாலடியான பதில்!

0
802
Ashwin

மகேந்திர சிங் தோனி சுழற் பந்துவீச்சாளர்களை கையாளுவதில் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் இருந்து வருகிறார்.

இந்த வகையில் இவர் இந்திய அணிக்கு கண்டுபிடித்த இரண்டு திறமையான விரல் சுழற் பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா. இந்தியாவின் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மகேந்திர சிங் தோனியின் காலத்தில் இவர்களே பிரதான சுழற் பந்துவீச்சாளர்களாக இருந்தார்கள்.

- Advertisement -

இதற்குப் பிறகு விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்றதும் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்கள் சாகல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இந்தியாவின் வெள்ளைப்பந்தின் பிரதான சுழற் பந்துவீச்சாளர்களாகக் கொண்டுவரப்பட்டார்கள்.

பிறகு சாகல் இதிலிருந்து வெளியேற தற்பொழுது ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் இருந்து வருகிறார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அப்போது இருந்து இப்போது வரை அசைக்க முடியாத ஜோடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இருந்து வருகிறார்கள்.

இவர்களுடைய சுழற் பந்துவீச்சு கூட்டான்மை பற்றி பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் “இன்றைய கிரிக்கெட் உலகில் மிகவும் கவர்ச்சிகரமான பலரால் பின் தொடரப்படும் வீரராக விராட் கோலி இருக்கிறார். பொதுவாக நான் யாரையும் பார்த்து பொறாமைப்படும் நபர் கிடையாது. ஆனால் நான் பார்த்து பொறாமைப்படும் ஒரே நபர் ரவீந்திர ஜடேஜா.

- Advertisement -

ஒருவரை விட ஒருவர் யார் சிறந்தவர் என்பதில் எங்களுக்குள் நீண்ட காலமாக போட்டியிருந்து வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் உண்மை என்னவென்றால் நாங்கள் ஒருவர் இல்லை என்றால் இன்னொருவர் கிடையாது.

ஜடேஜா இல்லாமல் அஸ்வின் கிடையாது; அஸ்வின் இல்லாமல் ஜடேஜா கிடையாது. அவர் எதையும் அதிகமாக சிந்திக்காமல் எல்லாவற்றையும் எளிமையாக வைத்திருப்பார். ஆனால் என்னால் எதையும் சிந்திக்காமல் இருக்க முடியாது. இந்த வகையில் நாங்கள் இருவரும் வித்தியாசமானவர்கள். ஆனா இப்படிப்பட்ட நாங்கள் இருவரும் சிறந்த கூட்டாளிகளாக விளையாட்டில் இருக்கிறோம். இது ஒரு உன்னதமான நிகழ்வு!” என்று கூறியிருக்கிறார்!