“என்னாலும் முடியாது.. என்னை விட இந்த விஷயத்தில் கேஎல்.ராகுல்தான் பெஸ்ட்!” – ராகுல் டிராவிட் வெளிப்படையான பேச்சு!

0
693
Dravid

இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் முக்கியமான போட்டி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தரம்சாலா மைதானத்தில் நடக்க இருக்கிறது!

இன்றைய போட்டியில் இந்திய அணியில் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹரிதிக் பாண்டியா இடம்பெற மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி எப்படி அமையும் என்பது சுவாரசியமான ஒன்றாக இருந்து வருகிறது. ஹர்திக் பாண்டியா இடத்தில் இஷான் கிஷான்,
கொண்டுவரப்பட்டு, சர்துல் தாக்கூர் இடத்தில் முகமது சமி கொண்டுவரப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பல கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்து பேசி இருக்கிறார்.

கே.எல்.ராகுல் அனைத்து விக்கெட் கீப்பராகவும் அளித்து வரும் பங்கு குறித்து அவர் பேசும் பொழுது “கேஎல்.ராகுல் அற்புதமாக விக்கெட் கீப்பிங் செய்கிறார் மேலும் பேட்டிங்கும் சிறப்பாக செய்கிறார். அவர் காயத்தில் இருந்து நீண்ட காலத்திற்குப் பிறகு அணிக்கு வந்தாலும் கூட, மிகச் சிறப்பான முறையில் அணிக்குள் இருந்து செயல்படுகிறார். அவர் தனது பேட்டிங்கிலும், விக்கெட் கீப்பிங்லும் கடினமாக உழைத்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் இந்த இரண்டு பொறுப்புகளையும் செய்வது நிச்சயமாக எளிதான ஒன்று கிடையாது. அவர் தனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சிறப்பாக செய்திருக்கிறார். என்னுடைய அனுபவத்திற்கு எடுத்துக் கொண்டால் கூட என்னாலும் இப்படி தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியாது. யாராக இருந்தாலும் நிச்சயம் தவறும்.

விக்கெட் கீப்பிங் பொறுத்தவரை அவர் என்னைவிட கொஞ்சம் அதிகமாகவே அதில் செயல்பட்டு இருக்கிறார். 19 வயதுக்கு உட்பட்ட அணியில் விக்கெட் கீப்பராகவும், சில டி20 போட்டிகளுக்கும் மாநில அணிக்காகவும் விக்கெட் கீப்பிங் செய்திருக்கிறார்.

அவர் திரும்பி வந்த விதம் அபாரமானது. அவர் காயம் நேரத்தில் கூட மிகக் கடுமையாக உழைத்தார். அவர் விக்கெட் கீப்பிங்கில் நிறைய நேரம் செலவிட்டார். எனவே இந்த விஷயத்தில் மிகவும் நன்றாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். இதைப் பார்க்க நன்றாக இருக்கிறது. அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!