“நான் இங்க ரொம்ப நல்லா வந்தேன்.. ஆனா இப்ப என்னோட நிலைமை..!” – கேப்டன் பட்லர் வேதனையான பேச்சு!

0
678
Buttler

இங்கிலாந்து அணி இந்த உலகக்கோப்பை தொடருக்கு நடப்பு உலக சாம்பியனாக வந்து தற்பொழுது தொடர்ச்சியாக ஐந்து தோல்விகள் பெற்று மிகவும் விரக்தியான நிலையில் இருக்கிறது!

இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 286 ரன்கள் துரத்தி 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக ஐந்தாவது தோல்வியை பெற்றது!

- Advertisement -

ஏற்கனவே அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துவிட்ட இங்கிலாந்து அணி, மேற்கொண்டு 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தகுதி பெறுவதற்காக வெற்றி பெற வேண்டியது அவசியமாக இருந்தது.

இந்த நிலையில் இன்று சிறப்பாகவே பந்துவீசி ஆரம்பித்து கடைசி கட்டத்தில் ஆடம் ஜாம்பாவை 29 ரன்கள் அடித்து விட்டு, தற்பொழுது 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது.

உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியின் தோல்வி அந்த அணியினரையும் அந்த அணியின் ரசிகர்களையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது என்று கூற வேண்டும்.

- Advertisement -

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறும்பொழுது “இது நிச்சயமாக எங்களுக்கு வேதனை அளிக்கிறது. நாங்கள் நிச்சயமாக நம்பியவர்களுக்கு நீதி செய்யவில்லை. 2019 ஆண்டு போல நாங்கள் உச்சத்தை தொட விரும்புகிறோம். ஆனால் அது மிகவும் கடினமானது. அதற்கு எவ்வளவு உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும் என்று எங்களுக்கு தெரியும்.

நாங்கள் எங்கள் மக்களை ஏமாற்றி இருக்கிறோம் என்று உணருகிறோம். இந்த ரன்கள் துரத்துவதற்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஆடம் ஜாம்பா மற்றும் ஸ்டார்க் இடையே ஒரு வெறுப்பூட்டும் பார்ட்னர்ஷிப் உருவாகி விட்டது.

நான் ஆட்டம் இழந்த ஷாட் சரியானது என்று நினைக்கிறேன். ஆனால் அதைச் செயல்படுத்துவதில்தான் தவறு இருக்கிறது. என்னுடைய பார்ம் மிகவும் கவலைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. நான் இங்கு வரும்பொழுது நல்ல நிலைமையில் இருந்தேன். ஆனால் என்னுடைய மோசமான ஃபார்ம் எனது அணிக்கு பெரிய பிரச்சனையை கொடுக்கிறது. அடுத்து மீண்டும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டிக்கு திரும்பி வரவேண்டும். பார்ம்க்கு வருவதற்கான வழிகளை பார்க்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!