“ஆசியா கப் ஐபிஎல் எல்லாம் நான் வந்ததுமே அடிச்சுட்டேன்.. சீக்கிரம் திரும்ப வருவேன்!” – தீபக் சகர் மாஸ் பேட்டி!

0
569
Deepak

தற்பொழுது காயத்தால் இந்திய அணியில் இடம் பெறாமல் இருக்கின்ற வேகப்பந்துவீச்சாளர் தீபக் சகர் மகேந்திர சிங் தோனியின் கண்டுபிடிப்பு என்று கூறலாம்!

ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடிய பொழுது, அந்த அணியில் தீபக் சகர் இடம் பெற்று இருந்தார்.

- Advertisement -

அவருடைய பந்துவீச்சு செயல்பாட்டை பார்த்த மகேந்திர சிங் தோனி அவரை 2018 ஆம் வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் கொண்டு வந்தார்.

அங்கிருந்து தீபக் சகர் வாழ்க்கை மாற ஆரம்பித்தது. பல வீரர்களின் கனவாக இருக்கின்ற ஐபிஎல் தொடரை அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வென்று விட்டார். மேலும் அவர் உள்ளே வந்த புதிதிலேயே ஆசிய கோப்பை தொடரை வென்று விட்டார்.

இப்பொழுது காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர் ராஜஸ்தான் டி20 லீக்கில் சிறப்பாகவே விளையாடினார். மிகக் குறிப்பாக அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. இதன் காரணமாகவே அவர் குறுகிய வடிவ கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருப்பார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள அவர் “ஒரு வீரர் காயங்களால் ஏமாற்றம் அடையக் கூடாது.இந்த விஷயங்கள் ஒரு வீரரின் கையில் இல்லை. தற்பொழுது என்னுடைய நோக்கம் பிட்டாக இருப்பது மற்றும் அணிக்கு நான் கிடைப்பது என்பது மட்டும்தான். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அணிக்காக 100% கொடுப்பேன்.

என்னை பொறுத்தவரை நான் மோசமாக நேரத்தை அனுபவித்தேன் என்று சொல்லலாம். கடந்த ஆண்டு எனக்கு முதுகில் ஏற்பட்ட காயம் ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு மிக மோசமான ஒன்று. ஆனால் நான் இப்பொழுது முழு உடல் தகுதியுடன் இருக்கிறேன். இந்த நேரத்தில் எனது பந்துவீச்சில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நான் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறேன். நான் தற்பொழுது ராஜஸ்தான் பிரிமியர் லீக்கில் விளையாடினேன். ஞாயிற்றுக்கிழமை வரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்தேன். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு செல்லும் இந்திய அணி உடன் பயிற்சியில் ஈடுபட்டேன்.

ஒரு கிரிக்கெட் வீரரின் கனவு அணிக்காக நாட்டுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது. வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அதை செய்ய நான் முயற்சி செய்வேன்.

நான் என்னுடைய முதல் அறிமுகத்திலேயே ஆசியக் கோப்பையை
2018 ஆம் ஆண்டு வென்று விட்டேன். அதேபோல் நான் விளையாடிய கடைசி ஆறு ஐபிஎல் சீசன்களில் ஐந்து முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று மூன்று முறை சாம்பியன் அணியில் இருந்திருக்கிறேன். பெரிய வெற்றிகள் பழக்கமான ஒன்றுதான்!” என்று கூறி இருக்கிறார்!