“நான் நெக்ராவிடம் வேலை கேட்டேன்.. ஆனால் அவர் தரவில்லை!” – யுவராஜ் சிங் சுவாரசிய தகவல்

0
410
Nehra

இந்திய கிரிக்கெட்டில் வெற்றிகரமாக விளங்கிய பல வீரர்கள் தற்பொழுது கிரிக்கெட் வர்ணனையாளர்களாகவும், சிலர் இந்தியா மற்றும் ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒன்றில் பயிற்சியாளர் குழுவிலும் இடம்பெற்று தங்கள் ஓய்வு காலத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த விதத்தில் சேவாக் எந்தவிதமான பொறுப்புகளையும் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. அவ்வப்பொழுது கிரிக்கெட் வர்ணனை செய்வதற்கு முக்கியமான நேரங்களில் வந்தது உண்டு.

- Advertisement -

இதேபோல் இந்திய கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய யுவராஜ் சிங் 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு, அவர் கிரிக்கெட் வர்ணனை மற்றும் ஏதாவது கிரிக்கெட் அணிகளில் பயிற்சியாளர் பொறுப்பு என்று எதையும் செய்யவில்லை.

தற்பொழுது யுவராஜ் சிங் தன் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கி வளரும் சிறிய குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறார். எனவே அவர் எந்த ஒரு வெளி வேலைகளையும் ஏற்கவில்லை என்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய பயிற்சியாளராக இருக்கும் இந்திய முன்னாள் வீரர் ஆசிஷ் நெக்ரா இடம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் வேலை கேட்டதாகவும், அதற்கு அவர் அதை மறுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். நெக்ரா 2017 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று, அடுத்து உடனே ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் பயிற்சியாளர் குழுவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறும் பொழுது ” நான் திரு ஆசிஸ் நெக்ராவிடம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் வேலை கேட்டேன். ஆனால் அவர் அதை மறுத்து விட்டார். எனவே வேறு எங்கு நான் ஏதாவது ஒரு பதவியை பெற முடியும் என்று பார்ப்போம். ஆனால் இந்த நேரத்தில் நான் ஒரு சமநிலையில் இருக்க வேண்டும். எனவே வரும் ஆண்டுகளில் நான் நிச்சயம் கிரிக்கெட்டுக்குத் திரும்பி இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாக செயல்படுவேன்.

எனக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும். ஆனால் இப்போது எனது முன்னுரிமை குழந்தைகளுக்கு என்று இருக்கிறது. அவர்கள் அடுத்த வருடம் பள்ளிக்கூடம் சென்று விடுவார்கள். இதனால் எனக்கு கொஞ்சம் அதிக நேரம் கிடைக்கும்.

நான் இளைஞர்களுடன் குறிப்பாக எனது மாநில இளம் வீரர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். வழிகாட்டுதல் மென்டர் பதவி என்பது நான் மிகவும் விரும்பும் ஒரு விஷயம். நிச்சயமாக ஏதாவது ஒரு ஐபிஎல் அணிகள் ஏதாவது ஒரு பதவிக்கு வருவேன்!” என்று கூறி இருக்கிறார்.