“உறுதியா சொல்றேன்.. இந்தியா சீக்கிரம் உலக கோப்பை ஜெயிக்கும்.. காரணம் இதுதான்!” – ரவி சாஸ்திரி அசத்தல் கணிப்பு!

0
2801
Ravi

தற்பொழுது கிரிக்கெட் உலகத்தின் அதிகாரம் மையமாக இருப்பது இந்தியாதான். வணிகரீதியாக மட்டும் அல்லாமல் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தரவரிசை ரீதியாகவும் இந்திய கிரிக்கெட் மிகச் சிறப்பான இடத்தில் இருக்கிறது.

மேலும் இந்தியாவில் மக்கள் தொகை மிக அதிகம் என்பதாலும், இதில் கிரிக்கெட்டுக்கு விளையாட்டில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதாலும், நிறைய இளம் கிரிக்கெட் திறமைகள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

- Advertisement -

எதிர்காலத்தில் இந்தியா மூன்று அணிகளை உருவாக்குவதற்கு வீரர்களைவைத்திருந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு கிடையாது. இந்த காரணங்களால் இந்தியா தற்போது உலகக் கிரிக்கெட்டின் அதிகார மையமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு உலகக் கோப்பை தொடரை வென்று ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் பின்னடைவாகவும் சோகமான விஷயமாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்தியாவில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்த சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எல்லோரும் நம்பினார்கள். அந்த அளவிற்கு இந்திய அணியின் செயல்பாடு இருந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. தற்பொழுது வரை உலகக் கோப்பை என்பது இந்திய கிரிக்கட்டுக்கு கனவாகவே இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள ரவி சாஸ்திரி கூறும் பொழுது “இந்தியா விரைவில் உலகக் கோப்பை வெல்வதை நான் பார்க்கிறேன். அது 50 ஓவர் வடிவத்தில் வராது. ஏனென்றால் அதற்கு புதியதாக ஒரு அணியை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் டி20 கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணி மிகவும் சிறப்பாக இருக்கிறது. நல்ல அணிக்கான அடிப்படையைக் கொண்டிருக்கிறது. எனவே இந்த வடிவத்தில் இந்தியா சீக்கிரத்தில் உலகக் கோப்பையை வெல்லும்.எனவே இந்த வடிவத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் அற்புதம் என்று நினைக்கிறேன். தொடரின் நடுப்பகுதியில் இந்திய அணியின் பந்துவீச்சு செயல்பாடு மிகச் சிறப்பாக மாறியது. எல்லாம் சரியாக இருந்தும் தோற்றதுதான் உள்ளிருந்து மிகவும் வலிக்கிறது.

இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய மனிதரான சச்சின் ஒரு உலக கோப்பையை வெல்லக் கூட அவருக்கு ஆறு உலகக் கோப்பை தொடர்கள் தேவைப்பட்டது. ஒரு பெரிய தொடரை வெல்வதற்கு நாம் அன்றைய நாளில் சிறப்பாக இருக்க வேண்டும். முன்பு நாம் என்ன செய்தோம் என்பது அங்கு ஒரு பொருட்டே கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!