கேப்டன்சியில் இருந்து விலக்கப்பட்ட கோஹ்லிக்கு கௌதம் கம்பீர் அளித்த ஆறுதல் வார்த்தைகள்

0
200
Virat Kohli and Gautham Gambhir

விராட் கோலி குறித்த அதிகாரபூர்வமற்ற செய்திகள் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த மாதம் நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடர் உடன் விராட் கோலி இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். அதேபோல இந்த ஆண் நடந்து முடிந்த ஐபிஎல் தொடருடன், பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேறினார்.

இனி இந்திய அணிக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக மட்டுமே தனது பணியை தொடரப் போவதாகவும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இனி முழு கவனம் செலுத்தப் போவதாகவும் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து பிசிசிஐ இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமத்தது.

- Advertisement -

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ விராட் கோலியை இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி அந்த பதவியை ரோஹித் ஷர்மாவிடம் கொடுத்தது. ஒருநாள் போட்டிகளை பொருத்தவரையில் ஒரு கேப்டனாக விராட் கோலி நல்ல ரெக்கார்டு வைத்திருக்கும் நிலையில், எதற்காக பிசிசிஐ இந்த அதிரடி முடிவை எடுத்தது என்று ரசிகர்கள் தற்போது வரை கேள்வி எழுப்பிக் கொண்டு வருகின்றனர்.

அவர் இந்திய அணியை பெருமையின் உச்சிக்கு அழைத்துச் செல்வார்

இது சம்பந்தமாக வை பற்றி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், விராட் கோலி நிச்சயமாக இந்திய அணியை பெருமை அடையச் செய்வார். இனி வரும் நாட்களில் இந்திய ரசிகர்கள் விராட் கோயில் மிகச் சிறந்த ஃபார்மை கண்டு கிடைக்கப் போகின்றனர்.

கிரிக்கெட் மீது வைத்திருக்கும் அவருடைய ஈடுபாடு மற்றும் அளவில்லாத ஆர்வம் என்றுமே குறைய போவதில்லை. இதை அவர் நீண்ட நாட்களாக வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்திய அணியின் கேப்டனாக விளையாடினாலும் சரி கேப்டனாக விளையாட வில்லை என்றாலும் சரி, நிச்சயமாக தன்னுடைய முழு பங்களிப்பை என்றும் இந்திய அணிக்காக வழங்கிக் கொண்டே இருப்பார். நிச்சயமாக அவர் இந்திய அணியை பெருமையும் உச்சிக்கு அழைத்துச் செல்வார் என்று இறுதியாக கௌதம் கம்பீர் விராட் கோலி குறித்த நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -