“பவுலிங்ல புதுசா இந்த 3 வெரைட்டி ரெடி பண்ணி இருக்கேன்.. டெஸ்ட் விளையாடனும்” – தீபக் சகர் அசத்தல் பேச்சு!

0
501
Deepak

தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உள்நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளையும், ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியையும் வென்று இருக்கிறது.

இந்த நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிக்கு தீபக் சகர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். பிரசித் கிருஷ்ணா இடத்தில் தீபக் சகர் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் திலக் வர்மா இடத்தில் ஸ்ரேயாஸ் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் புவனேஸ்வர் குமார் ஸ்விங் வேகபந்து வீச்சின் மாஸ்டராக இருந்து வந்தார். பந்து காற்றில் நகரும் சூழல்களில் அவர் எந்த பேட்ஸ்மேனுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவர். அவருக்கு இடையில் காயம் ஏற்பட்டதற்கு பின்பு, பந்தில் ஸ்விங் இருந்தாலும் கூட, வேகம் குறைந்த காரணத்தினால் தாக்கம் குறைவாகிவிட்டது. இதன் காரணமாக இவரது இடத்தை நிரப்ப வேண்டியது முக்கியம்.

புவனேஸ்வர் குமார் இடத்திற்கு தீபக் சகர் மிகவும் பொருத்தமான ஒரு வீரர். இவரால் பந்தை இரண்டு புறமும் காற்றில் ஸ்விங் செய்ய முடியும். அதேசமயத்தில் இவரால் நன்றாக பேட்டிங் செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு. புதிய பந்தில் வீசி பேட்டிங்கும் செய்வதால் இவருக்கு எப்பொழுதும் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வரவேற்பு உண்டு.

ஆனால் தீபக் சகருக்கு ஏற்படுகின்ற காயம்தான் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. சீக்கிரத்தில் காயமடைய கூடியவராக இருக்கின்ற காரணத்தினால், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இவரை பெரிய தொடர்களுக்கு தயார்படுத்த தயங்குகிறது. ஏனென்றால் இறுதி கட்டத்தில் இவர் காயம் அடைந்தால் அது பெரிய பின்னடைவை உலகக் கோப்பையில் உருவாக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள தீபக் சகர் கூறும் பொழுது “நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் முன் தயாரிப்பு இருக்கிறது. கடந்த முறை ரஞ்சி மற்றும் ஐபிஎல் தொடரில் என்னுடைய தயாரிப்பு சிறந்ததாக இருந்தது. நான் டெஸ்ட் போட்டியும் விளையாடுவேன். ஆனால் எனக்கு முன்கூட்டியே சொன்னால் அதற்கு தயாராவேன்.

ஏனென்றால் அதற்கேற்ற வகையில் என்னுடைய வேலைப்பளுவை அதிகமாகி உடலைப் பழக்க வேண்டும். எனக்கு பந்தில் ஸ்விங் உள்ளது. எனக்கு ஒரு மாதம் முன்பு சொன்னால் நான் தயாராகி வர முடியும். நான் இந்தியாவுக்காக டெஸ்ட் விளையாட விரும்புகிறேன்.

பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் ஆடுகளங்களை தவிர மற்ற எல்லா ஆடுகளங்களையும் நான் விரும்புகிறேன். மெதுவாக இருக்கும் மற்றும் புல் இருக்கும் ஆடுகளங்கள் எனக்கு பிடிக்கும். புல் இருக்கும் ஆடுகளங்களில் இரண்டாவது பகுதியில் பந்துவீச்சாளர்கள் தாக்கப்படுவார்கள் என்பது தெரியும். அதே சமயத்தில் மெதுவான ஆடுகளத்தில் என்னுடைய வேரியேஷன்கள் மற்றும் ஸ்விங் மூலம் என்னால் சிறப்பாக செயல்பட முடியும்.

நான் தற்போது நல்ல முறையில் நக்குல் பால் வீசுகிறேன். மேலும் தற்போது லெக் கட்டர் பழகி இருக்கிறேன். மேலும் மெதுவான பவுன்சர் வீசுவதிலும் தற்பொழுது பயிற்சி செய்து தேறியிருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!