இந்திய அணியில் இவர் ஒருவரை மட்டும் நான் நம்பமாட்டேன்.. இவரால் எப்போது வேண்டுமானாலும் பிரச்சினை வரலாம் – கபில் தேவ் கருத்து!

0
11093

தற்போது இருக்கும் இந்திய அணியில் நான் ஒரு வீரரை எப்போதும் நம்பமாட்டேன். அவரால் எப்போது வேண்டுமானாலும் பிரச்சினை வரலாம் என்று திடுக்கிடும் கருத்தை கூறியுள்ளார் ஜாம்பவான் கப்பில் தேவ்.

நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்திய அணி பைனல் வரை சென்று, இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியா அணியிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது.

- Advertisement -

இம்முறை தோல்வியை தழுவியதற்காக ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருந்தாலும், முன்னணி இந்திய வீரர்கள் சிலர் காயம் காரணமாக விளையாடாதது இந்திய அணிக்கு பின்னடைவை தந்திருக்கிறது.

ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கும் மேல் விளையாடவில்லை. இது மிகப்பெரிய பின்னடைவை கொடுத்தது. இங்கிலாந்து போன்ற மைதானத்தில் பும்ராவின் வேகப்பந்துவீச்சு நன்றாக எடுபடும். அதேபோல் டி20 உலககோப்பையிலும் ஆஸ்திரேலியா மைதானங்களில் பும்ரா பந்துவீச்சு சிறப்பாக இருந்திருக்கும். இரண்டிற்க்கும் அவர் இல்லாதது ஏமாற்றம் தான்.

பேட்டிங்கில் ரிஷப் பன்ட் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது. அதேநேரம் ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் போன்ற முன்னணி வீரர்களும் பேட்டிங்கில் இல்லாதது இந்திய அணி தோல்வியை தழுவுவதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஜாம்பவான் கபில் தேவ், இந்திய வீரர்களின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் அடிக்கடி காயம் அடைவது குறித்து பேட்டியளிக்கையில் கருத்து தெரிவித்தார். அப்போது ஹார்திக் பாண்டியா குறித்தும் கபில் தேவ் பேசியது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

“விளையாட்டு வீரர்களுக்கு காயங்கள் என்பது கெரியரின் ஒரு அங்கமாகவே இருக்கும். காயங்கள் தான் திடமான மனநிலையை கொடுக்கும். சூழல்களை எப்படி கையாள்வது என்பதை கற்றுக்கொடுக்கும். ஆகையால் அதைக்கண்டு வீரர்கள் ஒருபோதும் சுணக்கம் அடைய மாட்டார்கள்.

எனக்கு இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை நினைத்தால் தான் சற்று பயமாக இருக்கும். அவர் எப்போது வேண்டுமானாலும் காயம் அடையக்கூடியவராக இருக்கிறார். ஒரு போதும் நான் அவரை காயம் விஷயத்தில் நம்புவதில்லை. இந்திய அணியும் அவரை சார்ந்து இருந்திடக்கூடாது. அவரை போன்ற வெகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களை உருவாக்க வேண்டும்.

காயங்கள் விஷயத்தில் மட்டும் சிறப்பாக கையாண்டு விட்டால் இந்திய அணி இந்த உலக கோப்பையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்று கப்பில் தேவ் வாழ்த்துக்களுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.