கம்மின்சை 20கோடிக்கு வாங்கிய ஹைதராபாத்.. ஒரே ட்விட்டில் காலி செய்த சிஎஸ்கே.. என்ன நடந்தது?

0
2107
CSK

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும், அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த ஏலத்தில் ஆரம்பத்தில் அதிக தொகை வைத்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக வீரர்களுக்கு மோத ஆரம்பித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எல்லோரும் கணிப்புகளையும் தவிர்க்கும் விதமாக எதிர்பாராத வீரர்கள் மேல் ஏலத்திற்கு சென்றது.

- Advertisement -

இதன் காரணமாக ஏலத்தின் துவக்கம் முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டுக்கும் இடையில் ஏலத்தில் ஒரு பெரிய போட்டி உருவானது.

இந்த போட்டியில் முதலில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இருந்து 6.80 கோடி ரூபாய்க்கு டிராவீஸ் ஹெட்டை பறித்தார்கள்.

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இடம் இருந்து அடுத்தடுத்து ரச்சின் ரவீந்தரா மற்றும் சர்துல் தாக்கூர் இருவரையும் மிகக் குறைந்த விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கி அதிர்ச்சி கொடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து நிற்காமல் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு யாரும் எதிர்பார்க்காத விதத்தில் டேரில் மிட்சலை வாங்கி இன்னும் ஆச்சரியத்தை கூட்டியது.

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் இறுதிவரை மோதி ஆஸ்திரேலியாவின் தற்போதைய கேப்டன் பேட் கம்மின்சை, ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகபட்ச விலையான 20.50 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது. இந்த இரு அணிகளும் இவ்வளவு விலைக்கு அவருக்கு ஏன் போனார்கள் என்று இதுவரை புரியவில்லை.

இந்த நிலையில் இதே கருத்தை வலியுறுத்தும் விதமாக நகைச்சுவையாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், சார்பட்டா தமிழ் திரைப்படத்தில் வரும் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி “ஓ 20 கோடியா!” என்று கலாய்த்து விட்டு இருக்கிறார்கள்.

உண்மையில் இவருக்கு இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டிய அளவுக்கு, அவருடைய ஐபிஎல் செயல்பாடு அவ்வளவு பிரமாதமானதாக இதுவரை இருந்தது கிடையாது. தற்பொழுது இவரை இந்த இரு அணிகளும் போட்டி போட்டு வாங்கியது எல்லோருக்கும் ஆச்சரியத்தைதான் ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயத்தில் தொடர்ந்து போட்டி போட்ட காவியாவை சிஎஸ்கே கலாய்த்து விட்டிருக்கிறது!